சென்னை டூ தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில்.. பயணிகள் நீண்ட கால ஏக்கம் நிறைவேறுது.. வெளியான குட் நியூஸ்
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதேபோன்று தஞ்சை டூ ஓசுருக்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகம், சொகுசு உள்ளிட்டவை காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல வழித்தடங்களில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதல் வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னை - எழும்பூர், சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை- பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இருக்கை வசதிகள் கொண்ட ரயிலாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது. அதே போல, சென்னை- மதுரை, நெல்லை ரூட்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை டூ தூத்துக்குடிக்கு
இந்த நிலையில்தான், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலையும் தஞ்சையில் இருந்து மைசூர் வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கை
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை சாதாரண ரயில்களை விட கட்டணம் அதிகம். ஆனாலும் முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், பயோ டாய்லட் வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது முத்துநகர் ரயில் மட்டுமே உள்ளது.
தொழில் நகரமாகவும் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் நிறைந்த மாவட்டமுமாக இருக்கும் தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
8 மணி நேரத்தில் சென்றடையும்
இந்த சூழலில்தான், சென்னை - தூத்துக்குடி ரூட்டில் புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications