திடீரென பறந்த புதிய "உத்தரவு.." சென்னை நெல்லை வந்தே பாரத்! இது ரொம்பவே முக்கியம் ஆச்சே! என்ன மேட்டர்
சென்னை: சென்னை- எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய உத்தரவுகள் மதுரை அதிகாரிகளுக்குப் பறந்துள்ளது.
இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு நாடு முழுக்க மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் டிராகிங் என இதில் பல அட்டகாசமான வசதிகள் கொட்டி கிடக்கிறது.
இதனால் வெளியான உடனேயே வந்தே பாரத் ரயில்கள் ஹிட் அடித்தன. இதற்கு நாடு முழுக்க பெரும் ஆதரவை மக்கள் கொடுத்து வருகின்றனர். இப்போது நாடு முழுக்க 20+ ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகச் சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு- கோவை இடையே வந்தே பாரத் இயக்கப்பட்டது. இது பயண நேரத்தை வெகுவாக குறைத்த நிலையில் பலரும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
அதன்படி தமிழ்நாட்டின் அடுத்த மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலை இயக்க மதுரை ரயில்வே கோட்டம் படுவேகமாக ரெடியாகி வருகிறது. இதற்கிடையே வந்தே பாரத் ரயிலுக்கான பராமரிப்பு மையங்களைத் தயார் நிலையில் வைக்கத் திருநெல்வேலி ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு: அதாவது திருநெல்வேலியில் வந்தே பாரத் ரயிலைப் பராமரிக்க முன்னுரிமை அளிக்கும் வகையில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்ற ரயில்களைப் போல இல்லாமல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க ஏசி வசதியைக் கொண்டுள்ளது. இதனால் இங்கே அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளே இருக்கிறது. எனவே, இந்த ரயிலின் கதவுகளுக்கே தனியாகப் பராமரிப்பு பணிகள் தேவை. அதற்குத் தேவையான கருவிகளை ரெடியாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் எங்கே உள்ளது: இந்த ரூட்டில் பயன்படுத்தப்பட இருக்கும் ரயிலை ஏற்கனவே ஐசிஎஃப் தொழிற்சாலை ரயில்வே துறையிடம் ஒப்படைத்துவிட்டது. இப்போது அந்த ரயில் சென்னை எழும்பூரில் இருக்கும் நிலையில், உரிய ஆய்வை மேற்கொண்டு ரயிலை பெற்றுக் கொள்ளுமாறு மதுரையைச் சேர்ந்த உதவி கோட்ட இயந்திர பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் விளக்கு மற்றும் ஏசி கருவிகளை உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களை நியமிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதலில் சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் இதனைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்றும் தகவல் வெளியானது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு தேதி இறுதி செய்யப்படவில்லை என மீண்டும் ஒரு சுற்றறிக்கை வந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனை ஓட்டம்: தமிழ்நாட்டின் இந்த மூன்றாவது வந்தே பாரத் ரயிலை இயக்க பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. மிக விரைவில் சென்னை- நெல்லை இடையே இந்த ரூட்டில் சோதனை ஓட்டமும் நடக்கும் எனத் தெரிகிறது. இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்தால் தான் எவ்வளவு வேகமாகச் சென்னை டூ நெல்லை செல்ல முடியும் என்பது துல்லியமாகத் தெரியும்.
இருப்பினும், மற்ற ரயில்களைக் காட்டிலும் சுமார் 2 மணி வேகமாக இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இடையில் இந்த ரயில் 4 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும் என்றும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications