அம்மான்னு கூட பார்க்கலயே.. அதுவும் பிளாஸ்டிக் கவரில்.. சென்னை பீச்சில் படகிற்குள் எட்டிப்பார்த்தால்?
சென்னை: 20 வயது இளைஞர் தந்த வாக்குமூலத்தை கேட்டு சென்னை போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. என்ன நடந்தது சென்னையில்?
திருவொற்றியூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பத்மா.. 45 வயதாகிறது.. இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர் ஆவார்.. இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு நிதிஷ் என்ற 20 வயது மகனும், சஞ்சய் என்ற 14 வயது மகனும் இருக்கிறார்கள். இதில் நிதிஷ் தனியார் காலேஜில் பிஎஸ்சி படித்து வருகிறார்... மகன் சஞ்சய் 10ம் வகுப்பு படிக்கிறார்.
வாய்ஸ் மெசேஜ்: இந்நிலையில் தன்னுடைய அம்மாவையையும், தம்பியையும் கொலை செய்துவிட்டதாக உறவினர் மகாலட்சுமிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் நிதிஷ்.. அதுமட்டுமல்ல, தன்னை யாரும் தேட வேண்டாம், தானும் தற்கொலை செய்ய போவதாகவும் அந்த வாய்ஸ் மெசேஜில் கூறியிருந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் மகாலட்சுமி, பதறியடித்து கொண்டு பத்மாவின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.. அப்போது, நிதிஷ் சொன்னதுபோலவே, பத்மாவும், சஞ்சய்யும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள். இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அந்த சடலங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார் நிதிஷ்.
சடலம்: இதைப்பார்த்து அலறிதுடித்தார் உறவினர் மகாலட்சுமி. பின்னர் தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்தனர்.. தாய் - மகன் இருவரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அத்துடன் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நிதிஷை தேட ஆரம்பித்தனர்.
ஒருவேளை அவர் தற்கொலை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தாலும், முழுவீச்சில் அவரை தேடிப்பார்த்தனர்.. அப்போதுதான், குப்பம் பகுதியில் அமைந்துள்ள பீச்சில் பதுங்கியிருந்த நிதிஷை கைது செய்தனர்... இப்போது அவரிடம் விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது. காலேஜில் நடந்த பரீட்சையில் தோல்வியடைந்த நிதிஷூக்கு அரியர் இருந்ததாம்.. எப்படியாவது படித்து, அந்த அரியரை முடித்துவிடும் அம்மாவும், தம்பியும் சொல்லி கொண்டேயிருந்தார்களாம்..
அதிர்ச்சி: அடிக்கடி அரியர் தொடர்பாக கண்டித்து கொண்டேயிருந்ததால், ஆத்திரத்தில் அம்மாவையும் தம்பியையும் நிதிஷ் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நிதிஷிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதாவது, அம்மா, தம்பி இருவரையும் நேற்றுமுன்தினம் கொலை செய்த நித்திஷ், அன்றைய இரவு 10 மணிக்கு, தன்னுடைய அக்கா (பெரியம்மாவின் மகள்) மகாலட்சுமி வீட்டிற்கு சென்று, தன்னுடைய பையை வைத்துள்ளார்.
அந்த பையில் செல்போன், வீட்டின் சாவி போன்றவற்றையும் வைத்துவிட்டு அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் அப்போதே இரவில் வெளியே சென்றுவிட்டாராம். நேற்று காலையில், மகாலட்சுமி நிதீஷ் பையிலிருந்த செல்போனை "ஆன்" செய்து பார்த்தபோதுதான், அதில் வாய்ஸ் மெசேஜ்களை கேட்டு அதிர்ந்துள்ளார்.. அதற்கு பிறகே மகாலட்சுமி தன்னுடைய சித்தி பத்மாவின் வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தபோதுதான் கதிகலங்கி போயிருக்கிறார்.
கடற்கரை: நேற்று முழுவதும் நிதிஷை போலீசார் தேடிவந்த நிலையில், கடற்கரையில் இருந்த படகில் நிதிஷ் தூங்கி கொண்டிருந்தாராம்.. அப்போதுதான், போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications