Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சியின் புது யோசனை.. இந்தியாவில் வேற எந்த நகரமும் எடுக்காத முயற்சி! குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் 15 மண்டலங்களிலும் 75 இடங்களில் சுற்றுச்சூழலை கண்காணிக்கும் கருவிகளை (IoT-based environmental sensors) பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் பெறப்படும் தகவல்களை கொண்டு மாசுபாடுகளை அளவிட முடியும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மாநகராட்சியின் இந்த முயற்சி மூலம் இந்தியாவில் இத்தகைய கருவிகளை பொருத்தும் முதல் நகராமாக சென்னை மாற இருக்கிறது.

based environmental sensors எனும் கருவியில் வெப்பம், ஈரப்பதம், காற்றின் தரம், நீர் மாசு மற்றும் ஒலி அளவு போன்றவற்றை அளவிடும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது சுற்றுச்சூழல் காரணிகளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும். இதில் IoT என்பது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம், மேலே குறிப்பிடப்பட்ட சென்சார்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் இணையம் வழியாக ஒரு மைய அமைப்புக்கோ அல்லது கிளவுட் பிளாட்பார்மிற்கோ அனுப்பப்படும்.

environment Smart city

சென்னையின் நிலைமை

கிளவுட் பிளாட்பாரத்திற்கு அனுப்பிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்ட பகுதியில் வெப்பம், ஈரப்பதம், காற்றின் தரம், நீர் மாசு மற்றும் ஒலி அளவு போன்றவை எவ்வளவு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிலைமையை மக்களுக்கு தெரிவிக்க முடியும். குறிப்பாக வெள்ளம் போன்ற காலத்தில் இந்த அளவீடு மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மக்கள் தொகை அடர்த்தி, தொழில் நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கருவிகளை பொருத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் கருவிகள் பொருத்தப்படும்?

திருவொற்றியூர், கத்திவாக்கம், கொளத்தூர், வடபழனி, மின்ட் தெரு, வண்ணாரப்பேட்டை, மணலி, வில்லிவாக்கம், கோயம்பேடு, மெரினா கடற்கரை, வேளச்சேரி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கருவிகள் பொருத்தப்படும். இந்தக் கருவிகள் அடர்ந்த மக்கள் தொகை உள்ள பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் உள்ள இடத்தில் பொருத்தப்படும். லைவாக காற்றுத் தரவு மற்றும் காலநிலைத் தகவல்களை இந்த கருவிகள் வழங்கும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தற்போது, சென்னையில் PM2.5, PM10, NO₂, SO₂, CO, O₃, வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் வெளிச்சத்தை அளவிடும் 18 சென்சார்கள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் இது போதுமானது கிடையாது. எனவேதான் 15 மண்டலங்களிலும் IoT-based environmental sensors கருவிகள் பொருத்தப்பட்ட இருக்கின்றன. இந்த கருவிகள் லைவ் தகவல்களை கொடுப்பதன் மூலம், நிர்வாகத்தின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். தரவுகள் கிடைத்தவுடன், அதை இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷனில் பொதுமக்கள் அணுகும்படி வெளியிடப்படும்.

உதாரணத்திற்கு சென்னை சென்ட்ரல் பகுதியில் வெப்பம் அதிகமாகவும் காற்றில் ஈரப்பதம் குறைவாகவும் இருப்பதாக தகவல் கிடைக்கிறது எனில், அதை பார்த்து ரயில் பிடிக்க செல்லும் பயணிகள் முன் தயாரிப்போடு செல்வார்கள். அதேபோல எழும்பூரில் கனமழை பெய்து ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என தகவல் கிடைக்கிறது எனில் பயணிகள் அதற்கேற்ப முன் தயாரிப்போடு போவார்கள்.

இந்த கருவிகளை பொருத்துவதற்கான நிர்வாக ஒப்புதல்கள் முடிந்துவிட்டன. விரைவில் டெண்டர்கள் கோரப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்படும். அடுத்த கட்டமாக, காற்று வேகம், காற்றின் திசை, வளிமண்டல அழுத்தம் மற்றும் மழைப்பொழிவு போன்றவற்றை அளவிடும் கருவிகளையும் பொருத்த மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.

போக்குவரத்து மாசு

சென்னையில் போக்குவரத்து காரணமாக ஏற்படும் மாசு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் அதை அளவிட சரியான கருவிகள் நம்மிடம் கிடையாது. எனவே IoT-based environmental sensors கருவிகள் இதையும் சரியாக அளந்து, காற்று மாசு எங்கு அதிகரிக்கிறது? எங்கு குறைவாக இருக்கிறது என்கிற தகவல்களையும் நமக்கு வழங்கும். இதனை அடிப்படையாக கொண்டு காற்று மாசை குறைக்க நாம் முயற்சிக்கலாம்" என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+