சென்னை டூ திருச்சி வெறும் 3 மணி நேரம்.. அசரடித்த ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் அட்டவணை
சென்னை: தமிழகத்தில் விரைவாக செல்ல விரும்பும் பயணிகளுக்காக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து புதிதாக ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் வெறும் ஏழு மணி நேரத்தில் ராமேஸ்வரம் போய்விட முடியும்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லவே ரயில்களில் ஆறு மணி நேரம் ஆகிறது. ஆம்னி பேருந்துகளே கண்டிப்பாக 7 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அரசு பேருந்துகளில் 8மணி நேரம் வரை கூட ஆகிறது. சென்னையில் விமானத்தில் திருச்சி செல்ல ஒரு மணி நேரம் போதும் என்றாலும், கட்டணம் மிக அதிகம்.. அதேநேரம் வந்தே பாரத் ரயிலில் கிளம்பினால் நம்பவே முடியாத அளவிற்கு காலையில் கிளம்பி காலையிலேயே டிபனை திருச்சியில் சாப்பிட முடியும்.

ஆம்.. ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலில் தாம்பரத்தில் இருந்து காலை 5.52க்கு ஏறினால் காலை 9.20க்கு எல்லாம் திருச்சி போய்விட முடியும். இவ்வளவு விரைவாக எந்த ரயிலும் செல்லாது. எழும்பூரில் இருந்து கணக்கிட்டால், அதிகாலை 5.30க்கு புறப்பட்டு, திருச்சிக்கு காலையில் 9.20க்கு போய்விட முடியும். ராமேஸ்வரத்திற்கே ஏழு மணி நேரத்தில் சென்னையில் இருந்து போய்விடலாம்.. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும், மிக விரைவாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரே நாளில் ராமேஸ்வரத்திற்கு போய்விட்டு, மறுபடியும் சென்னைக்கு திரும்ப வந்துவிட முடியும். அந்த அளவிற்கு வந்தே பாரத் வேகமாக செல்கிறது.
முன்னதாக ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் ரயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகியிருக்கிறது.
இந்த கால அட்டவணைப்படி, இந்த ரயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட இருக்கிறது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications