எல்லாமே மாறுகிறதே.. சென்னைக்கு ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்.. கோயம்பேட்டிலும் மாற்றம்.. சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைவாசிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசலாகும்.. எவ்வளவுதான் மாற்றங்களை கொண்டுவந்தாலும், சென்னை போக்குவரத்து, காவல்துறைக்கும் சவாலாகவே உள்ளது.. இந்த போக்குவரத்து நெரிசல்களுக்கு நடுவில், சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது அடுத்த பிரச்சனையாக உள்ளது.. எனவேதான், இதற்கெல்லாம் சேர்த்து தீர்வு காண, சென்னை மாநகராட்சி முக்கிய அதிரடியை கையில் எடுக்க போகிறது.

சென்னை போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே, ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை, தி.நகர் போன்ற பகுதிகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் முதல் அண்ணா நகரிலும், இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கொண்டுவரப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.

chennai Koyambedu Smart Parking System

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து ஆணையமும் இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கொண்டுவரப் போவதால், அண்ணா நகரில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2வது, 3வது, 6வது அவென்யூ சாலைகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. அதாவது, 4 சக்கர வாகனங்கள் 2000, இருசக்கர வாகனங்கள் 5000 நிறுத்த முடியும் என்கிறார்கள்.. வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்காக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடையூறாக உள்ள வாகனங்களை கண்காணிக்க 1000-க்கும் அதிகமான சிசிடிவியும் பொருத்தப்பட உள்ளன.

டிரைவர்களும் தங்கள் செல்போன் ஆப்களை வைத்து, அருகிலுள்ள பார்க்கிங் இடங்களை கண்டறியலாம், ரிசர்வ் செய்யலாம்.. ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, டூவீலர்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பார்க்கிங்

யாராவது கட்டணம் செலுத்தாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால், அந்த வண்டிகள் லாக் செய்யப்படும்.. அதிலும், 6 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால், அந்த வாகனத்தை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றுவிடுவார்களாம். இதுபோன்ற அதிரடிகளால் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில், சென்னை மாநகரம் முழுவதும் ஏற்கனவே வாகன பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிகிறது.. எனினும், அண்ணாநகரில் அமைய உள்ள ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் மூலம் இந்தியாவின் முதல் முழுமையான ஸ்மார்ட் பார்க்கிங் நகரமாக சென்னை மாற உள்ளதாம்..

மார்க்கெட் பகுதி

இப்படி புது விதமான திட்டங்களை சென்னை மாநகராட்சி கொண்டு வரப்போகிறது.. இந்த திட்டத்தை சென்னை கோயம்பேடு பகுதியிலும் விரைந்து கொண்டு வந்தால் உதவியாக இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு தற்போது முழுமையாக செயல்படாவிட்டாலும், மார்க்கெட் பகுதியில் கூட்டம் நிறைந்து வழிகிறது.. இது அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறாகவே அமைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 300க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டுள்ள நிலையில், இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்தில் புகார் அளித்தபடி இருந்தனர்..

கோயம்பேடு மார்க்கெட்

எனவே, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அங்காடி அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அதே இடத்தில் முளைத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக மறுபடியும் புகார்கள் கிளம்பின.. இதையடுத்து நேற்று காலையிலும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 300 ஆக்கிரமிப்பு கடைகளை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+