சென்னை அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம்.. முடங்கிய போக்குவரத்து
சென்னை: சென்னை அம்பத்தூர் கருக்கு சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியது. பள்ளத்தின் அருகே மின்கம்பம் சாயும் நிலையில் இருப்பதால் அபாயம் இருந்து வருகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் பள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.. 2 வாரத்திற்குள் மீண்டும் பள்ளம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர். அடிக்கடி ஏற்படும் பள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூர் கருக்கு சாலை வழியாக மாதங்குப்பம், புதூர், கள்ளிகுப்பம் என ஏராளமான பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாகனங்களில் பயணித்து வருகிறார்கள். இந்த சாலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி திடீரென பாதாள சாக்கடை குழாய் உடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

இதனால் ஒரு வாரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு சீர் செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் நடைபெற்று 2 வாரங்களுக்குள் மீண்டும் தற்போது அதே சாலையில் ஏற்கெனவே பள்ளம் விழுந்த இடத்திற்கு அருகே மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தால் சாலையின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.. அத்துடன் பள்ளத்தின் அருகே இருக்கும் மின்கம்பம் சாயும் நிலையில் அபாயமாக உள்ளது. இருப்பினும் ஆபத்தை உணராமல் மக்கள் அங்கு பள்ளத்தை வேடிக்கை பார்த்து சென்றார்கள்.
சாலைக்கு கீழே செல்லும் பாதாள சாக்கடையின் குழாய் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கருக்கு சாலையின் கீழே செல்லும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கு, கடந்த மாதம் 17ம் தேதி, 10 அடி அகலத்தில், 15 ஆழத்திற்கு 'மெகா' பள்ளம் ஏற்பட்ட போது, அவ்வழியாக வந்த 34 வயதாகும் சரவணன் என்பவர் பைக்குடன் பள்ளத்தில் விழுந்தார். மேலும், ஈச்சர் லாரியின் பின்பக்க சக்கரமும் சிக்கிக்கொண்டது.நான்கு நாட்கள் போராடி அந்த பள்ளத்தை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் சீர் செய்தனர். இந்நிலையில் தான் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications