திடீரென சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகள் ! புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாகச் சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் வரை ரயில் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், இதனால் சென்னை சென்ட்ரலில் மக்கள் கூட்டமும் அதிகமாகத் திரண்டுள்ளது.
சென்னையின் பொது போக்குவரத்தில் மிக முக்கியமானது புறநகர் ரயில்கள். குறைந்த விலையில் பயணிக்க முடியும்.. டிராபிக் பிரச்சினை இருக்காது எனப் பல காரணங்களால் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் புறநகர் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் ஆபீஸ் செல்லவும், வீடு திரும்பவும் பொதுமக்கள் புறநகர் ரயில்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே இன்று திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில்களை இயக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
சென்னையில் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.. சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் இயக்கப்பட்டது. சென்னை- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கம் இயக்கப்படும் தாமதமாகின. சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஆனதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் திரண்டது.
ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால் கூட்டம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், சிக்னல் கோளாறு பிரச்சினை தொடர்கதையாகி வருவதாகவும் இதை நிரந்தரமாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications