தீபாவளிக்கு மனைவியை அழைத்து உல்லாசம்.. ராத்திரி முழுக்க காத்திருந்து டிவி நடிகரை கொன்ற விஜயகுமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில், பல முறை சொல்லியும் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் டிவி நடிகர் செல்வரத்தினத்தை. தனது நண்பர்களுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக விஜயக்குமார் என்ற இலங்கை அகதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்தவர் செல்வரத்தினம் (41)., அகதியாக சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை டேம் காலனி அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தார். பின்னர் நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக சென்னை வந்த அவர் நண்பர்கள் உதவியுடன் தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்தார்.

எம்.ஜி.ஆர். நகர் வள்ளல் பாரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செல்வரத்தினத்திற்கு திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நடிகர் செல்வரத்தினத்தை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.

அடிக்கடி தொலைப்பேசியில் பேச்சு

அடிக்கடி தொலைப்பேசியில் பேச்சு

இது தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட செல்வரத்தினம் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, செல்வரத்தினம் பெண் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. அத்துடன் அவர் அடிக்கடி பேசிய அழைப்புகளையும் ஆய்வு செய்தனர்.

கள்ளக்காதல் காரணம்

கள்ளக்காதல் காரணம்

அதில் விருதுநகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் பெண் ஒருவருடன் அடிக்கடி செல்வரத்தினம் பேசியது தெரிய வந்தது இதனால் போலீசார் விசாரணை நடத்திய போது, நடிகர் செல்வரத்தினம் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. உடனே தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் விருதுநகரில் உள்ள அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த கள்ளக்காதலியின் கணவன் விஜயகுமார் (38) என்பவரை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

கைவிட மறுப்பு

கைவிட மறுப்பு

பின்னர் கைதான விஜயகுமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் வீட்டின் அருகே வசிக்கும் மற்றொரு இலங்கை அகதி தான் செல்வரத்தினம். இவருக்கம் என். மனைவி டயானாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நானும், டயானாவும் டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம்,. சின்னத்திரையில் செல்வரத்தினம் நடிப்பதால் என் மனைவி உடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. செல்வரத்தினத்தின் வீட்டிலும் கள்ளக்காதலால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செல்வரத்தினத்தின் மனைவி சென்னையில் இருந்து கிளம்பி விருதுநகரில் உள்ள அகதிகள் முகாமிலேயே தனது 3 குழந்தைகளுடன் வசிக்க தொடங்கினார்.

தீபாவளி அன்றும் ஜாலி

தீபாவளி அன்றும் ஜாலி

பலமுறை செல்வரத்தினத்தினத்தையும் என் மனைவி டயானாவையும் கண்டித்தேன். ஆனால் இருவரும் கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. அகதிகள் முகாமில் என்னை பார்த்து பலர் கேலி கிண்டல் செய்தனர் .இதற்கிடையே செல்வரத்தினம் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதனால் சென்னையில் இருந்து அடிக்கடி விருதுநகருக்கு வரவில்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் விருதுநகரில் இருந்து சென்னைக்கு அழைத்து தனது வாடகை வீட்டில் உல்லாசமாக இருந்தது எனக்கு தெரியவந்தது. தீபாவளி அன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு செல்வரத்தினத்தை பார்க்க சென்னைக்கு டயானா சென்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் என் மனைவிக்கு தெரியாமல் சென்னை வந்தேன்.

அதிகாலையில் வெட்டிக் கொலை

அதிகாலையில் வெட்டிக் கொலை

அன்று இரவு முழுவதும் செல்வரத்தினத்தின் வீட்டின் அருகே காத்திருந்து அதிகாலை செல்வரத்தினம் வெளியே வரும் போது எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தேன். பின்னர் ஒன்றும் தெரியாதபடி விருதுநகருக்கு சென்று விட்டேன்" என்றார். இதனிடையே சிசிடிவி மற்றும் செல்போன் உதவி விஜயகுமார் சிக்கியதாக எம்ஜிஆர் நகர் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+