OMR ரோட்டுல என்னங்க.. அதுவும் "U" ஷேப்ல மேம்பாலம்.. டைடல் பார்க் கிட்டயே.. எப்போ திறக்கறாங்க தெரியுமா
சென்னை: சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி வரப்போகிறது.. இன்னொரு புது மேம்பாலமும் வரப்போகிறது.. எங்கே என்று தெரியுமா?
சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.. இதனால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
அதில் முக்கியமான ஒன்றுதான், ராஜீவ் காந்தி சாலை.. இந்த ரோட்டில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது..

இதற்கு காரணம், ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான அலுவலகங்கள் இந்த பகுதியில்தான் உள்ளது.. இதனால், இந்த சாலையை கடந்துதான், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல வேண்டியிருக்கிறது.
ஜங்ஷன்: குறிப்பாக ராஜீவ் காந்தி சாலை + ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு + இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடம் ஆகிறது.. அதுவும், பீக் நேரங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடுகிறது.. சில சமயம் முக்கால்மணி நேரம்கூட ஆகிறது.. போக்குவரத்து கொஞ்சம் தடைபட்டாலும், அடுத்த செகண்டே, வரிசைக்கட்டி வண்டிகள் நிற்க ஆரம்பித்துவிடுகின்றன.
அதனால், இந்தச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரையையும் செய்தனர்.

U-வடிவ மேம்பாலம்: கடந்த ஜூலை 2019ல், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்புகளில் இரண்டு U- வடிவ மேம்பாலங்கள் கட்டப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.. இதற்கு 2019 நவம்பரில் ரூ.108.13 கோடி என்று அறிவித்து அனுமதியையும் வழங்கியது..
பின்னர், பாலம் அமைக்கும் பணிகள் 2020ம் ஆண்டு ஆரம்பமானது.. இந்த பணிகள் இப்போது முடிவடைந்துள்ளது.. விரைவில் பயன்பாட்டுக்கும் வரப்போகிறதாம்.. இதுகுறித்து, டிஎம்ஆர்டிசி அதிகாரிகள் சொல்லும்போது, "சிறுசேரியில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள் உயரமான நிலையில் யூடர்ன் செய்ய முடியும். பிறகு, இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் அங்கிருந்து செல்லும் பிற சாலைகளைப் பயன்படுத்தி இலக்குகளை அடைய முடியும்.
நிறைவு: சுமார் 250 மீட்டர் கொண்ட மேம்பாலத்தின் பிரதான பகுதியை அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பாலம் ஓரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இப்போது அந்த பணிகளும் நிறைவடைந்துவிட்டன.. இந்த மாதம் முதல் மற்றும் 2ம் வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும். பிறகு, இந்த மாத இறுதிக்குள்ளேயே மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்...
அதேபோல் டைடல் பார்க் சந்திப்பிற்கு அருகில் கட்டப்பட்டுள்ள 2வதும் மேம்பாலமும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்... டைடல் பார்க் மற்றும் சிஎஸ்ஐஆர் சாலை சந்திப்புகளுக்கு இடையே வரும் இருவழிப்பாதை, ஒரே திசை மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்கள் யூடர்ன் எடுக்க பயன்படுத்தப்படும்.
பொதுமக்கள் மகிழ்ச்சி: டைடல் பார்க் மற்றும் இந்திராநகர் சிக்னல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 13,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பணிகள் நிறைவடையும் போது டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சிக்னல்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் சீராக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்படும்" என்கிறார்கள்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications