சென்னையில் சினிமா முடிந்து நள்ளிரவில் நடந்த வந்த இளைஞர்.. திருநங்கைகளால் நடந்த நம்ப முடியாத சம்பவம்
சென்னை: சென்னையில் ரயில்களில், பேருந்து நிலையங்களில், சாலைகளில், வலுக்கட்டாயமாக சில திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. எல்லா திருநங்கைகளும் அப்படி செய்வது இல்லை.. ஒரு சில திருநங்கைளே இப்படி செய்வார்கள். அப்படியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திருநின்றவூரை சேர்ந்த ஆலன் ரோசாரியா என்ற என்ஜினியரை தாக்கி தங்க நகை கொள்ளையடித்த திருநங்கைகள், அவரது ஜிபே மூலம் பணமும் பறித்துள்ளார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் திருநங்கைகள் யாகசம் பெறுவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக மின்சார ரயில்களில் எல்லா நேரங்களிலு திருநங்கைகள் யாசகம் பெறுவதை பார்த்திருப்பீர்கள். அதில் பலர் யாசகம் தரமறுப்பார்கள். இதை திருநங்கைகளும் கடந்து செல்வார்கள்.

ஆனால் ஒரு சில திருநங்கைகள், மிரட்டி, அசிங்கமாக பேசி காசு கேட்பதும் நடக்கும் நடக்கும். அதேபோல் பேருந்து நிலையத்திலும், நடந்து செல்லும் போதும், சிலர் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் நடப்பது உண்டு. அப்படித்தான் திருநங்கைகள் இரண்டு பேர் ஒரு இளைஞரை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 24 வயதாகும் ஆலன் ரோசாரியா என்பவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கே.கே. நகரில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்த்து விட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது திருநங்கைகள் இருவர் அவரை வழிமறித்தனர்.
ரோசாரியாவிடம் பணம் கேட்டுள்ளார்கள். அவர் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ரோசாரியாவின் செல்போனை பறித்தார்களாம். பின்னர் 'ஜிபே' மூலம் ரூ.300-ஐ அவர்கள் தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினார்களாம். அத்துடன் ரோசாரியா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் கொள்ளையடித்துவிட்டு திருநங்கைகள் இருவரும் தப்பி சென்று விட்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ரோசாரியா அளித்த புகாரின் பேரில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் சாந்தி (28), சாய்னா (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு வேளையில் திருநங்கைகள், தங்க நகையை பறித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications