வளசரவாக்கத்தில் குஷி.. சென்னை மாநகராட்சியின் "ஸ்மார்ட்".. 24 மணி நேரமும் "நான்-ஸ்டாப்" கொண்டாட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் அடுத்த அதிரடி கிளம்பியிருக்கிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது எல்லா துறைகளுமே டிஜிட்டல் மயமாகி வருகின்றன.. அந்தவகையில், ஸ்மார்ட் மீட்டர்களை விரைவில் தமிழகம் முழுக்க பொருத்தப்படும் என்று மின்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால், மின்கட்டண முறை இன்னும் எளிதாகும் என்றும், கட்டண வசூலில் முறைகேடுகள் இருக்க வாய்ப்பே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மின்கட்டணம்: இந்த வரிசையில், சென்னை மாநகராட்சியின் மெட்ரோ குடிநீர் இணைப்பிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. காரணம், சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு தற்போது குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது..
அந்தவகையில், தினமும் சுமார் 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.. இதற்கு மாற்றாகத்தான், குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
ஸ்மார்ட் மீட்டர்: தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிடவே, இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.. அந்தவகையில் எப்படியும் அடுத்த சில மாதங்களுக்குள் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களிலும் தண்ணீர் மீட்டர்களை நிறுவ மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இதற்கான பணிகளை தற்போது மெட்ரோவாட்டர் தொடங்கிவிட்டதாம்.. குறிப்பாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மெஜஸ்டிக்காலனி(வார்டு152), ராமகிருஷ்ணாநகர் (வார்டு149) பகுதியில் 8212 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி ரூ.69.64 கோடிமதிப்பீட்டில் நடைபெற்று வருகிறதாம்.
குடிநீர்தொட்டிகள்: அந்தவகையில், குடிநீர் சப்ளை செய்வதற்காக மெஜஸ்டிக் காலனியில் 19 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், பூமிக்கு அடியில் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராமகிருஷ்ணா நகரில் 29 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் பொருத்தப்பட்டிருக்கின்றன..
இதற்காக 100 மி.மீட்டர் முதல் 450 மி.மீட்டர் விட்டம் வரையிலான குடிநீர் பைப்புகள் சுமார் 84 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்க உள்ளார்களாம். இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்திருப்பதாகவும், மிச்ச பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆகமொத்தம், இந்த பகுதிகளில் 24 மணிநேரமும் தண்ணீர் வினியோகிக்கப்படுவதுடன், 70 ஆயிரம் பேர் இதன்மூலம் பயன் அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications