சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடி 5 வாகனங்கள் மீது மோதிய கார்! ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய மக்கள்
சென்னை: சென்னை வேப்பேரி அருகே தறி கெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில் குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கார், ஒரு கார், இரு ஆட்டோக்கள், இரு இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இரு பெண்கள், ஒரு குழந்தை, ஆட்டோ ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கி பிடிக்க வாகன ஓட்டிகள் சிலர் முயற்சித்தனர். ஆனால் அந்த காரோ வேகமாக சென்ற போது மேலும் சில வாகனங்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இருவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
ஆனால் வாகன ஓட்டிகள் இருவரையும் பிடித்து சரமாரியாக அடித்தனர். தொடர்ந்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இரு நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது காரில் உகாண்டா கொடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் உகாண்டா தூதரக அதிகாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர், போதை பொருளை பயன்படுத்தியிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காரில் வந்தவர்கள் தந்தை, மகன் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அடித்த போதே நாங்கள் காரை ஓட்டவில்லை என அவர்கள் இருவரும் தெரிவித்தனர். ஆனால் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர், இல்லை, இவர்தான் ஓட்டினார் என தெரிவித்தார். இதையடுத்து அந்த நபருக்கு மேலும் தர்ம அடி விழுந்தது. அந்த பெண் வைத்திருந்த குழந்தைக்கு தலையில் அதிகம் காயமேற்பட்டதாக தெரிகிறது.
மேலும் அந்த இருவரும் ஓட்டுநர்தான் ஓட்டினார் என கூறிய நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த கார் அதி வேகத்தில்தான் வந்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன குழந்தையின் தலையில் அதிக காயம் ஏற்பட்டது.
அதன் அம்மாவிற்கு லேசான காயம். அது போல் ஒரு ஆட்டோ மீது அந்த கார் மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. அதில் இரு பெண்கள் இருந்தனர். அவர்களை வெளியே எடுக்கவே முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் இணைந்து ஆட்டோவை இருபுறமும் இருந்து பிரித்தனர்.
அதன் பின்னர் அதிலிருந்த இரு பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்தே அந்த நபர் அதி வேகத்துடன் மற்ற வாகனங்கள் மீது மோதினார். வாகனங்களை மோதி விட்டு நிற்காமல் தப்ப முயன்றார். ஆனாலும் பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications