தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 30ம் தேதி மாலை மிக தீவிரமாக கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் 31 மற்றும் 1ம் தேதிகளில் மழையின் அளவு வெகுவாக குறைந்தது.
ஆனாலும் மாலை நேரத்திற்கு பின் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

வானிலை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா
கடலூர், காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழ்நாடு கடற்கரை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தரையில் இருந்து 4.2 முதல் 5.9 கிமீ உயரம் வரை இருக்கிறது.

தமிழ்நாடு மழை
இதன் காரணமாக இன்று மேற்கூறிய டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டதோடு காணும்.

சென்னை மழை
ஆங்காங்கே லேசான மழை பெய்யும். தீவிரமான மழை எங்கும் பெய்யாது. சென்னையில் வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். தமிழ்நாட்டில் நாளை முதல் மழையின் அளவு வெகுவாக குறையும். சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே கனமழை இடியுடன் பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
Recommended Video

மற்ற நாட்கள் வானிலை
நாளை மறுநாளில் இருந்து தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும். தென் மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications