1 கோடிக்கு ஆப்பிள் வாங்கி காஷ்மீர் நிறுவனத்துக்கு விபூதி அடித்த வியாபாரி.. ஜெயில் கம்பி எண்ணுகிறார்
சென்னை: சென்னை காஷ்மீர் நிறுவனத்திடம், ஆப்பிள்கள் வாங்கி, ரூ, 1 கோடி மோசடியில் ஈடுபட்ட , கோயம்பேடு மொத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து தான் ஆப்பிள்கள் நாடு முழுவதுக்கும் வருகின்றன. காஷ்மீர் ஆப்பிள்கள் உலகப்புகழ் பெற்றவை. காஷ்மீரில் இருந்து தினசரி லாரிகளில் சென்னைக்கு ஆப்பிள்கள் வருகின்றன
அப்படி அங்கிருந்து கோடிக்கணக்கில் ஆப்பிள்களை இறக்குமதி செய்த கோயம்பேடு மொத்த வியாபாரி அவருக்கு பணத்தை தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழக்கடை
சென்னை, விருகம்பாக்கம், பிருந்தாவன் நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (38). இவர், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ஆப்பிள் மொத்த வியாபார கடை வைத்துள்ளார்.

காஷ்மீர் நிறுவனம்
இந்நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த உசாம் புரூட்ஸ் என்ற நிறுவனம் கோயம்பேடு போலீசில் ஒரு புகார் அளித்தது அந்த புகாரில், தினகரன் தங்களிடம் ரூ.1.18 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு,அதற்கு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை
இதேபோல காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமும், தினகரன் மீது ரூ.45 லட்சம் மோசடி புகார் கொடுக்கப்பட்டன, இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர்.

தினகரன் கைது
விசாரணையில் பழக்கடை தினகரன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தினகரனை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications