சென்னையில் இன்று "பயங்கரமான" இரவு.. எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்! என்ன மேட்டர் தெரியுமா
சென்னை: கோடைக் காலம் முடியும் தறுவாயிலும் கூட சென்னையில் வெப்பம் நம்மை வாட்டி வதைக்கும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
கோடைக் காலம் தொடங்கியது முதலே வெப்பம் நம்மை வைத்துச் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த பிப். மாதமே வெப்பம் சில இடங்களில் 100 டிகிரியை தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் பிப். மாதம் இந்தளவுக்கு வெப்பம் பதிவானதே இல்லை.
அதன் பின்னரும் கூட வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பல இடங்களில் வெப்பம் 100ஐ தொட்டது. வட மாநிலங்களில் பல இடங்களில் வெப்ப அலையும் கூட வீசியது.

சென்னை: இந்த அளவு கடந்த வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மதிய நேரங்களில் வெளியே வரவே முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்தது. கடந்த மே மாதம் மோச்சா புயல் காரணமாக சில நாட்கள் மழை பெய்தாலும் கூட அதன் பின்னர் பெரியளவில் மழை பெய்யவே இல்லை. கடுமையான வெப்பமே வாட்டி வதக்கியது.
நேற்றைய தினம் எல்லாம் வெப்பம் சென்னையில் 106 டிகிரியை கூட அடைந்தது. இன்றைய தினம் வெப்பம் அந்தளவுக்கு இல்லை என்றாலும் கூட வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. மாலை 5- 5.30 வரையிலும் கூட வெப்பம் குறைய வில்லை. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் வெப்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

பயங்கரமான இரவு: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாலை 5.30 மணி ஆகிறது. இன்னும் சென்னையில் 38 C (100.4 பாரன்ஹூட்) வெப்பம் இருக்கிறது. கடல் காற்று சுத்தமாக இல்லை. இன்று ஒரு பயங்கரமான இரவாக இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது வெப்பம் நேற்றைப் போலக் கொடூரமாக இருக்காது என்ற போதிலும், இன்று இரவு வெப்பத்தைப் புழுக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக மாலை 3.30 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "இப்போது வரை சென்னையில் கடல் காற்று வீசுவதற்கான அறிகுறியே இல்லை.. நேற்று போல் வெப்பம் அதிகமாக இருக்காது என்றாலும் கடல் காற்று லேட் ஆனால் மிக மோசமாக இருக்கும். ஆனால் இதனால் சென்னைக்கு மேற்கே காஞ்சிபுரம் / திருவள்ளூர் பெல்ட் அருகே மேற்கு திசையில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
It is 5.30 p.m and Chennai is sizzling at 38 C and No sea breeze. It might be a horrible night going on. pic.twitter.com/yTcoOMbElj
— Tamil Nadu Weatherman (@praddy06) June 4, 2023
வானிலை மையம்: இதற்கிடையே வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல வரும் ஜூன் 6 முதல் 8 வரையிலான தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications