ச்சே.. கரெக்டா அந்த நேரம் பார்த்தா.. "அது" வழுக்கி விழணும்.. கொந்தளித்த மனைவி.. பரிதாப கணவர்!!
சென்னை: சென்னையில் விக் வைத்துக் கொண்டு கணவன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக மனைவி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). கடந்த 2015-ஆம் ஆண்டு மேட்ரிமோனி சைட் மூலம் ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 50 சவரன் நகையும் ரொக்க பணமும் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆன போதும் இருவரும் குடும்பம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

ஈடுபாடு காட்டாத கணவர்
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்த ராஜசேகர் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணே இவரை வற்புறுத்தி இல்லற வாழ்க்கையில் இணைய சொன்னார். அப்போது தலையில் இருந்த விக் கழன்று விழுந்துவிட்டது.

வழுக்கை
அப்போது ராஜசேகர் தலையில் முடி இல்லாமல் வழுக்கையுடன் இருந்ததை கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். தலையில் விக் அணிந்து புகைப்படம் எடுத்து அதை மேட்ரிமோனி சைட்டில் போட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக ராஜசேகரிடம் வாக்குவாதம் செய்தார்.

பொய்
இதற்காகத்தான் இத்தனை நாட்கள் தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருந்தீர்களா என்றும் அந்த பெண் கேட்டு சண்டையிட்டுள்ளார். வரதட்சிணையாக கொடுத்த 50 சவரன் நகைகளையும் ராஜசேகர் செலவு செய்துவிட்டு வங்கியில் லாக்கரில் இருப்பதாக பொய் கூறிவிட்டார்.

விசாரணை
இவையெல்லாம் தனக்கு தெரிந்தவுடன் தன்னை ராஜசேகர் அடித்து துன்புறுத்துவதாக கடந்த 2015-ஆம் ஆண்டே புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராஜசேகர், அவரது தாயார் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications