Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையல் மாஸ்டர் கணவனுடன் சண்டை.. சென்னை பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு! நிர்கதியாய் 2 பிஞ்சுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் வேலை செய்து வந்த கணவனை பிரிந்து வசித்து வந்த பெண் காவலர் ஒருவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு தமிழக போலீசில் நேரடியாக பணியில் சேர்ந்த கார்த்திகா ராணி, சில மாதங்களுக்கு முன்வரை டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் அண்ணா நகர் போக்குவரத்து பிரிவிற்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு திருமணமானது. அவர் சமையல் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 8 வயது மகனும் 6 வயது மகளும் உள்ளனர். குடும்பத்துடன் டிபிசத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பிரிந்து, தனது குழந்தைகள் உடன் வாழ்ந்து வந்தார்.

Chennai police crime

பெண் காவலர்

இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று வீடு திரும்பிய அவர், இரவு நேரத்தில் வீட்டு உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மர்ம மரணம்

சிறிது நேரத்தில் கார்த்திகா ராணியின் அண்ணனின் நண்பரான காவலர் அபினேஷ், அவரை பார்க்க வீட்டுக்கு சென்றபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

தகவல் கிடைத்ததும் டிபி சத்திரம் போலீசார் விரைந்து சென்று நிகழ்விடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 174 CrPC பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, குடும்ப தகராறா? பணிச்சுமையா? அல்லது பிற தனிப்பட்ட பிரச்சனைகளா? எனப் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சனை

கார்த்திகா ராணி வசித்து வந்த வீட்டில் அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? அல்லது அவரது செல்போனில் தற்கொலை தொடர்பான ஏதேனும் தகவல் உள்ளதா? என்பதையும் போலீசார் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு டிஜிட்டல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மன அழுத்தம் அதிகரித்து இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+