சென்னையை அதிரவைத்த பெண் இன்ஸ்பெக்டர்.. வருமானத்தை விட 372% சொத்து குவிப்பு!
சென்னை: சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராஜலட்சுமி தனது வருமானத்தை விட அதிகமாக 372 சதவீதம் வரை சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் விபசாரம், சூதாட்டம் உள்பட சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. சென்னை எழும்பூர் பழைய கமிஷன் அலுவலக அலுவலகத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி எஸ்ஐ ஆக பணிக்கு சேர்ந்தார். கடந்த 2010ம் ஆண்டில் இன்ஸ்பெக்டரானார். இன்ஸ்பெக்டரான பிறகு சென்னையில் பல்வேறு பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். அவர் மீது பல புகார்கள் எழுந்தன. குறிப்பாக தனது வருமானத்தை விட அதிகமாக சொத்து குவித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 2017 ஜூன் 1 முதல் 2025 ஜூன் 30 வரையிலான காலத்தில் அவரது சொத்துகள் ஆய்வு செய்யப்பட்டன. ராஜலட்சுமிக்கு ரூ.5.42 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜலட்சுமி தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் அசையும், அசையா சொத்துகளை வாங்கி உள்ளார். அதாவது நிலம், விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கி உள்ளதோடு, நிதி முதலீடுகளையும் செய்துள்ளார்.
இந்த சொத்துகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டு வாங்கப்பட்டுள்ளதோடு, அவருக்கான வருமானத்துடன் ஒப்பிடும்போது 372% அதிகமாகும். அதுமட்டுமின்றி அவர் சென்னையில் சில முக்கிய பிரிவுகளில் பணியாற்றியபோது இந்த சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இதுபற்றிய விசாரணையின்போது அவரால் கணக்கு காட்டவும் முடியவில்லை.
மேலும் வருமானத்தை மீறி சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சொத்துகள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது? சொத்துக்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களை திரட்டும் பணியில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பெண் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தனது வருமானத்தை மீறி 372 சதவீதத்து சொத்து சேர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications