ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மிரட்டும் கொரோனா... வெளியானது சென்னையின் லிஸ்ட்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 510 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5967 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17728 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 11640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5504 பேர் குணம் அடைந்துள்ளனர். 89 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ள 5967 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவிகநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
மே 27ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் விவரம்.

திருவெற்றியூர்: 344 (322)
மணலி: 156 (152)
மாதவரம் 256 (237)
தண்டையார் பேட்டை 1160 (1096)
இராயபுரம் 2146 (2065)
திருவிக நகர் 1285 (1253)
அம்பத்தூர் 484 (472)
அண்ணா நகர் 975 (924)
தேனாம்பேட்டை 1262 (1188)
கோடம்பாக்கம் 1525 (1488)
வளசரவாக்கம் 755 (740)
ஆலந்தூர் 157 (132)
அடையாறு 653 (619)
பெருங்குடி 203 (185)
சோழிங்கநல்லூர் 197 (184)
எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications