தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் வேகமாக உயரும் கொரோனா.. சென்னை பாதிப்பு.. வெளியான லிஸ்ட்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33244 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 16ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33244 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17476 பேர் குணம் அடைந்துள்ளனர்.
15385 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரு நாளில் சென்னையில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராயபுரம் அதிகம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4226 பேரும், கோடம்பாக்கத்தில் 3539 ஆகவும், தேனாம்பேட்டையில் 4031 ஆகவும், திருவிக நகரில் 2992 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 1885 பேருக்கும், அண்ணா நகரில் 3330 பேருக்கும் வளசரவாக்கத்தில் 1413 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்பு விதிகம் 1 சதவீதம்
15.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 53% பேர் (17,275) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது. 46 சதவீதம் பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
|
கொரோனா பாதிப்பு
ஜூன் 16ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
- திருவெற்றியூர்: 1224
- மணலி: 470
- மாதவரம் 894
- தண்டையார் பேட்டை 4226
- இராயபுரம் 5364
- திருவிக நகர் 2992
- அம்பத்தூர் 1148
- அண்ணா நகர் 3330
- தேனாம்பேட்டை 4031
- கோடம்பாக்கம் 3539
- வளசரவாக்கம் 1413
- ஆலந்தூர் 670
- அடையாறு 1885
- பெருங்குடி 630
- சோழிங்கநல்லூர் 615
- மற்ற மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 615
|
எங்கு என்ன பாதிப்பு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33,244 பேரில், அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 3168 பேர் குணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2156 பேரும், கோடம்பாக்கத்தில் 2013 பேரும், தேனாம்பேட்டையில் 1955 பேரும், திருவிக நகரில் 1723 பேரும் குணம் அடைந்துள்ளனர். அண்ணாநகரில் 1475 பபேரும், அடையாறில் 984 பேரும், வளசரவாக்கத்தில் 950 பேரும் குணம் அடைந்துள்ளனர். சென்னை மண்டலத்திலேயே அதிகபட்சமாக இராபுரம் மண்டலத்தில் 2124 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் உள்ளார்கள். தண்டையார்பேட்டையில் 2018 பேரும் தேனாம்பேட்டையில் 2021 பேரும் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications