சென்னையில் 4375 ஏக்கரில் 6வது பிரம்மாண்ட நீர் தேக்கம்.. ஓஎம்ஆர்-ஈசிஆர் சாலையில்.. தொடங்கிய அரசு
சென்னை: சென்னையில் தற்போது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் உள்ளன. இந்த ஐந்து பெரிய ஏரிகளின் மூலமும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில் சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் பகுதியில் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் அளித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் ஒன்றரை கோடி பேர் இருக்கிறார்கள். இந்த மக்களின் குடிநீர் தேவையை புறநகர் பகுதிகளில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீர்தேக்கங்களில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனுடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு வருகிறது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு தற்போது 1 டி.எம்.சி. வரை நீர் சென்னைக்கு தேவைப்படுகிறது.

பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, நீர்த்தேக்கங்களுக்கு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர் பெறப்படுகிறது. இதனுடன் பருவகால மழையால் பெறப்படும் நீர் சேமிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை மாநகரம் விரிவடைந்து செல்வதுடன், மக்கள்தொகையும் அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதலாக நீர்தேக்கங்கள் தேவைப்படுகிறது. இதனால் கடந்த பட்ஜெட் அறிவிப்பின்படி கோவளம் அருகே சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் பகுதியில் 4375 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு கூறுகையில், "சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் , கடல் நீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்க பெறும் குடிநீரை கொண்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தினால் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்கவும் புதிய நீர்தேக்கங்களை அமைப்பது இன்றியமையதாதது ஆகும்.
அந்த வகையில் சென்னைக்கு அருகே உள்ள கோவளம் உபவடிநிலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4375 ஏக்கர் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் சுமார் 1.6 டிஎம்சி கொள்ளவில், ஆண்டிற்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் அளவிற்கு சென்னையின் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர் தேக்கம் அமைக்கப்படும்.
அந்த 4375 ஏக்கர் அளவு நீர் தேக்கம் 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வாரு ஆண்டும் கிடைக்கக்கூடிய 160 எம்எல் குடிநீரை கொண்டு , சென்னை மக்களின் குடிநீர் தேவை, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட காலத்திற்கு நிறைவு செய்யப்படும்.. இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில நீர் வளத்துறைக்கு 9460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.
இந்த புதிய நீர் தேக்கம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பழைய மாமல்லபுரம்-கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே ரூ.471 கோடியில் 4 ஆயிரத்து 375 ஏக்கரில் இந்த நீர் தேக்கம் அமைய உள்ளது. ஆண்டுக்கு 2.25 டி.எம்.சி. வெள்ளநீரை சேமிக்கும் வகையிலும் இந்த புதிய நீர் தேக்கம் அமைய உள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைத்த உடன் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது" என்று கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications