சொந்த ஊருக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி... சென்னை டூ சேலம் காரில் பயணம்
சென்னை: கொரோனா பரபரப்புக்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தனது சொந்த ஊரான சேலத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் இருந்தவாறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறை பணிகள் பற்றி நாள்தோறும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவரை பொறுத்தவரை 15 நாட்களுக்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு விசிட் அடித்துவிடுவார்.

ஆனால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய பணிகள் இருந்ததால் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே தங்கி வந்தார். பொதுவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை சேலத்துக்கு செல்லும் இவர், தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொள்வார். உள்ளூர் கட்சிக்காரர்களுடன் ஆலோசனை நடத்துவார். நேரமிருந்தால் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வேளாண் பணிகள் பற்றியும் கேட்டறிவார்.
இதனிடையே கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கடந்த ஒரு மாதமாக சென்னையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதற்கட்ட ஊரடங்கு காலம் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு காலம் நடைமுறையில் உள்ள நிலையில் வரும் 20-ம் தேதி அதில் தளர்வு ஏற்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இது குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதற்குரிய சுற்றறிக்கை அறிவிப்பாணை உள்ளிட்டவைகள் பற்றியெல்லாம் முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல் செய்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே இன்று சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதனிடையே சேலத்தில் வரும் ஞயிற்றுக்கிழமை வரை முதல்வர் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊரில் இருந்தாலும் சுகாதாரத்துறை பணிகள் பற்றி தொடர்ந்து முதல்வர் கேட்டறிவார் என்றும் கொரோனோ நோய் தடுப்பு பணிகளில் எந்த சுணக்கமும் ஏற்படாது எனவும் முதல்வர் வட்டாரத்தில் கூறப்பட்டது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications