சென்னை டூ மதுரை... ஒரே விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -மு.க.ஸ்டாலின் பயணம்..!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து மதுரை வரை ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதற்காக அவர்கள் இருவரும் இன்று மாலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கு தங்குகிறார்கள். நாளை காலை கார் மூலம் சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்ட பின்னர் திமுகவுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கியுள்ளது. அப்போது அங்கு செல்லும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்.

முன்னதாக இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே விமானத்தில் அவர்கள் பயணம் செய்வதால் மதுரை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க திமுகவினரும், அதிமுகவினரும் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை விமான நிலையத்தில் இரு கட்சியினரையும் சமாளிக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications