“மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள்!” - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2வது குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார். இது குறித்து தனது x தளத்தில் அவர், "பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை: அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஒரு ஆசிரியராக இருந்து துணை குடியரசுத் தலைவராகவும், பிறகு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும்.
எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள, ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில், "ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்!
கல்வி அறிவு சிறந்ததுதான்; ஆனால், அதைவிடவும் சிறந்தது கேள்வி அறிவு! ஏனென்றால், கல்வி என்பது உள்ளதை உள்ளபடி நம் அறிவைக் கொண்டு நாம் கற்பது; ஆனால் கேள்வி என்பது ஆசிரியர் தம் அறிவையும், அனுபவத்தையும் கலந்து நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டுவது! அதனால்தான் நமது பாட்டன் வள்ளுவப்பெருமகனார், 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்றார்.

ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள்.
அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள். எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில், எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன்.
நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
வைரமுத்து: ஆசிரியப் பெருமக்காள்!
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம் உங்களை
எங்கள் சூரியோதயம்
உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது
உங்கள் சொற்களில்
இருள் உடைந்தது
எம்.ஜி.ஆரும் சிவாஜியும்
உச்சத்திலிருந்தபோது
நீங்களே எங்கள்
கதாநாயகர்கள்
நாங்கள் கேட்ட
முதல் சங்கீதம்
கரும்பலகையில் உங்கள்
'சாக்பீஸ்' சத்தம்
உங்களைக் கடக்கையில்
நெஞ்சு கடக்குமே
ஒரு மெல்லிய அச்சம்
அதுதான்
உங்கள் மதிப்பின் உச்சம்
தேர்வுத் தாளில்
எப்போதேனும் எழுதுவீர்களே
'நன்று' என்று
ஆகா!
ஒற்றைச் சொல்லில்
ஒருபுட்டி ரத்தம்
உங்கள் கிளையிற்
பழுத்த பழங்கள்
எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக
உங்கள் வேர்கள் மட்டும்
இங்கே...
ஆங்காங்கே...
ஓய்வுறுநாளில்
கல்விக் கூடத்தில் பதிந்த
உங்கள் கடைசிப் பார்வையும்
விடைபெறுநாளில்
உங்களை நாங்கள் பார்த்த
கண்ணீர்ப் பார்வையும்
வேறு வேறல்ல
ஆண்டு பல
நீண்டு வாழ்வீர்
ஐயன்மீர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications