அன்னையர் தினத்தில் அன்பு மழை! தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: உலக அன்னையர் தினமான இன்று, தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று மகிழ்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வரும் தயாளு அம்மாள் வயது மூப்பு காரணமாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். கருணாநிதி மறைவுக்கு பிறகு உடல்நலிவுற்ற நிலையில் இருந்து வரும் தயாளு அம்மாளை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாரத்திற்கு 4 முறையாவது கோபாலபுரம் இல்லம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரிக்கத் தவறுவதில்லை.
அதேபோல் மற்ற பிள்ளைகளான செல்வி, தமிழரசு உள்ளிட்டோரும் அடிக்கடி கோபாலபுரம் இல்லம் சென்று தங்கள் தாயாரை கவனித்துக் கொள்கின்றனர்.
மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதை ஒரு தாயாக தயாளு அம்மாவால் ஏற்க முடியவில்லை. அந்தக் கவலையும் அவருக்கு உள்ளூர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இன்று தனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு ஆசி பெற வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, உச்சிமுகர்ந்து ஆசி வழங்கியதுடன் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை பகிர்ந்தார்.

இந்நிலையில் உலக அன்னையர் தினம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தினம் வாழ்த்துகள்.
'' அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்.''
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications