மாநகராட்சி வரலாற்றில் இது தான் ரெக்கார்டு! நான் மேயராக இருந்தப்போ! பழைய நினைவலைகளை பகிர்ந்த ஸ்டாலின்
சென்னை: சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பேசிய போது தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் வருமாறு;
மாநகராட்சி வரலாற்றில்: நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரைக்கும் சென்னையைப் பொறுத்தவரைக்கும் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்கள் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.

மாநகரத்தின் மேயர்: ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து நான் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்தின் நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். வேகப்படுத்தினோம், விரைவுப்படுத்தினோம். அந்தப் பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்குள் 10 பாலங்களையும் கட்டி முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம்.
டெக்னிக்கல் பிரச்சினை: ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களைக் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை நமக்குண்டு.
இதுதான் ரெக்கார்டு: அதற்குப் பிறகு, ஆட்சி மாற்றம் வந்தது. ஆட்சி மாற்றம் வந்த காரணத்தினால், அந்தப் பெரம்பூர் பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதை ஏன் கிடப்பில் போட்டார்கள் என்ற விஷயத்தை நான் சொல்கிறேன். அது ஒரு பெரிய விஷயம். ஆனால் அதற்குப் பிறகு நாம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நாம் ஆட்சியிலிருந்தபோது அடிக்கல் நாட்டிப் பாதி பணியை முடித்து டெக்னிக்கல் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாலம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய தலைவர்தான், எந்தத் தலைவர் அடிக்கல் நாட்டினாரோ அதே தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். இதுதான் ரெக்கார்டு.
இன்னொரு அதிசயம்: அதோடு இன்னொரு அதிசயம் என்ன என்று கேட்டால், சென்னை மாநகரத்தில் கட்டியபோது எவ்வளவு காலத்திற்குள் கட்டிவிடுவோம் என்று சொன்னோமோ, அந்த காலத்திற்குள் கட்டிமுடித்தோம் என்பது மட்டுமல்ல, எந்த மதிப்பீட்டில் கட்டிமுடிக்கவேண்டும் என்று சொன்னோமோ அதைவிடக் குறைவாக அந்தப் பாலத்தைக் கட்டிமுடித்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இடையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அந்தப் பாலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அந்த வழக்கு போட்டார்கள்.
இரவோடு இரவாக: இரவோடு இரவாக, தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமையை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சோகமான நிகழ்ச்சியை எல்லாம் இங்கே எடுத்துக் கூற விரும்பவில்லை. கலைஞரைக் கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் தொடுத்தார்.
நீதிபதி என்.கே. ஜெயின்: அந்த பொதுநல வழக்கை தொடுத்த காரணத்தினால்தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே. ஜெயின் அவர்கள் அதை விசாரித்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தார். இதுதான் புருசோத்தமனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும், இயக்கத்தில் இருக்கக்கூடிய தலைவருக்கும் உள்ள வரலாறு என்பதை நான் பெருமையோடு இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications