நேற்றிலிருந்து இருமலால் அவதிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! Dr மோகன் காமேஸ்வரனிடம் ட்ரீட்மெண்ட்!
சென்னை: நேற்றிலிருந்து இருமலால் அவதிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், பிரபல காது மூக்கு தொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்விலிருந்து வருகிறார்.
மழைக்காலம் வந்தாலே: அதுமட்டுமல்ல முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரல் ஃப்ளூ காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டு அதற்குரிய மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் ஊரெங்கும் காய்ச்சல், சளி, இருமல் என பாதிப்பு பரவலாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை வழக்கமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் என்றாலும் காது மூக்கு தொண்டை பிரச்சனைகளுக்கு டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் தான் சிகிச்சை எடுத்துக் கொள்வார்.

மோகன் காமேஸ்வரன்: மோகன் காமேஸ்வரனை பொறுத்தவரை காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சையில் உலகின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவராக திகழ்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ள மோகன் காமேஸ்வரன் காது மூக்கு தொண்டை அறுவைச் சிகிச்சை துறையில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தவர். கருணாநிதிக்கே சிகிச்சை வழங்கியவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு ஓய்வு: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல சென்னையின் முக்கிய விஐபிக்கள் பலருக்கும் காது மூக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகளுக்கு மோகன் காமேஸ்வரன் தான் சிகிச்சை அளித்து வருகிறார். வைரல் ப்ளூ காய்ச்சலால் ஏற்பட்ட சாதாரண இருமலே தவிர மற்றபடி முதலமைச்சருக்கு பெரிதாக வேறு எந்த பாதிப்பும் இல்லை. இதனிடையே இன்னும் சில நாட்களுக்கு வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வீட்டில் ஓய்வில் இருக்குமாறு முதல்வருக்கு ஸ்டிரிக்டாக இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
ஓரிரு நாட்களில் வழக்கம் போல்: ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஓரிரு நாட்களில் வழக்கம் போல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள புறப்பட்டுவிடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே முதல்வரின் உடல்நலம் பற்றி வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முதல் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருமல் இருந்ததாகவும் மருத்துவ சோதனையில் வைரல் ப்ளூ காய்ச்சல் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்குரிய வழக்கமான மருந்துகளுடன் சில நாட்கள் மருத்துவரால் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications