தினம் ஒரு‛திருக்குறள்’.. இனி அரசு அலுவலகங்களில் கட்டாயம்.. அதிகாரிகளுக்கு இறையன்பு அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தினமும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கட்டாயம் எழுதிவைக்க வேண்டும். தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ் சொல்லுடன் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகையில் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டு கொள்ளலாம் மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர்,
மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications