சீட்டோடு சாலையில் பாய்ந்த கண்டக்டர்..அதோ கதியில் அரசு பேருந்துகள்! இனி இப்படி நடக்காது..பறந்த ஆர்டர்
சென்னை: கடந்த சில நாட்களாகவே அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்கப்படுவதாகவும், அரசு பேருந்தில் அமர்ந்திருந்த நடத்துனர் இருக்கையோடு வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு பேருந்துகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் முறையாக பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
அரசு பேருது சேவை: மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
சாலையில் விழுந்த நடத்துநர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சியில் இருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் வளைவில் திரும்பிய போது நடத்துனர் முருகேசன் பேருந்தில் இருந்து இருக்கையுடன் வெளியே விழுந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் அரசு பேருந்துகள் பராமரிப்பு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். மேலும் அரசு பேருந்தை முறையாக பராமரிக்கவில்லை என பணிமனை மேனேஜர் உள்ளிட்ட மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமைச் செயலகம்: இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் பனீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட 8 கோட்டங்களின் கீழ் சுமார் 20,000 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடும் விமர்சனம்: இதில் சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாது சொகுசு பேருந்துகள், தாழ்ந்த சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் படுக்கை வசதி மற்றும் ஏசி வசதி உள்ள பேருந்துகள் உட்பட 19,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக போக்குவரத்து துறை முன்னெடுத்துள்ள நிலையில் பராமரிப்பின்மை காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது, நடத்துனர் இருக்கையுடன் கீழே விழுவது, படிக்கட்டுகள் கழண்டு விழுவது என பல்வேறு விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு: இந்த நிலையில் தமிழகத்தில் தற்போதுள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பு பணியில் உள்ள பேருந்துகள், அவை என்ன நிலையில் இருக்கின்றன, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications