குழந்தைக்கு எமனாக மாறிய ‘பலூன்’.. மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி! ஷாக் சம்பவம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பலூனை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலூனை விழுங்கிய சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே மாகாணிப்பட்டு கிராமத்தில் சாம் என்ற 3 வயது சிறுவன் பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில் பலூனை விழுங்கியதாக கூறப்படுகிறது. பலூனை விழுங்கிய சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளான்.

இதைப்பார்த்த அந்தச் சிறுவனின் தாய், பதறியடித்தபடி மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபோது, ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு மகனை மடியில் தூக்கி வைத்து தாய் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
குழந்தைகளின் மிக விருப்பமான விளையாட்டுப் பொருளான பலூன், 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து விழுங்க முயற்சிக்கும், எனவே சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை தரும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications