மகளுடன் எந்த சண்டையும் இல்லை.. இறப்பதற்கு முன் என்னுடன்தான் பேசினார்.. சித்ராவின் தாயார் விஜயா
சென்னை: எனது மகளுடன் நான் சண்டை போடவில்லை என நடிகை சித்ராவின் தாயார் விஜயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கும் ஹேம்நாத்திற்கும் கடந்த அக்டோபரில் பதிவு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

இதனால் சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சித்ராவுக்கு அவரது தாயும் கணவரும் கொடுத்த மன அழுத்தமே அவரை தற்கொலை செய்ய தூண்டியதாக தெரிவித்தனர்.

ஆர்டிஓ
இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சித்ராவின் தாய் விஜயா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சித்ராவுக்கும் தாய்க்கும் இடையே நடந்த பிரச்சினை என்ன, அவர் இறப்பதற்கு முன் ஏதேனும் தெரிவித்தாரா உள்ளிட்ட கேள்விகளை ஆர்டிஓ கேட்டிருக்கலாம் என தெரிகிறது.

போனில் பேச்சு
இந்த நிலையில் இந்த விசாரணைக்கு பிறகு, வெளியே வந்த விஜயா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார் என்றார் விஜயா.

ஹேம்நாத்
அதாவது சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்ததாகவும் இதற்காக சித்ராவிடம் அவ்வப்போது காசு வாங்கியதால் சித்ராவால் திருவான்மியூரில் வாங்கிய வீட்டுக்கு மாத தவணையை வங்கிக்கு செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஹேம்நாத்தை நீ ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

வாக்குவாதம்
அவரை விட்டுவிட்டு நம் வீட்டுக்கே வந்துவிடு என சித்ராவின் தாயார் விஜயா அவ்வப்போது மகளுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹேம்நாத்திற்கு சித்ரா நடிப்பது பிடிக்கவில்லை என்றும் மாப்பிள்ளைக்கு பிடித்தபடி நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என சித்ராவின் தாயாரும் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனினும் விசாரணையில்தான் சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்,யார் காரணம் என்பது தெரியவரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications