‛‛வந்தே பாரத்’’.. நாகர்கோவில்-சென்னை மற்றும் சென்னை-கோழிக்கோடு இடையே டிச.,25ல் சிறப்பு ரயில்
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ம் தேதி நாகர்கோவில்-சென்னை இடையே சிறப்பு ரயிலும், சென்னை-கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறையின் காரணமாக ஏராளமானவர்கள் சொந்தஊர் செல்வதோடு பலரும் சென்னை, கேரளா செல்ல திட்டமிட்டு உள்ளார்கள்.

இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் நாளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயிலும், சென்னையில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடுவுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை-கோழிக்கோடு வந்தே பாரத் ரயில்: சென்னை-கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டிஎண்: 06041) டிசம்பர் 25ம் தேதி இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அன்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 3.20 மணிக்கு கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்றடைய உள்ளது.
இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனூர், பாலக்காடு, சோரனூர், திரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கோழிக்கோடுவை சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கி உள்ளது. மக்கள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில்: நாகர்கோவில்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் (06046) டிசம்பர் 25ம் தேதி இரவு 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், துரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click it and Unblock the Notifications