பொசுக்குன்னு யோகி காலில் விழுந்த ரஜினி.. தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் அப்சட் - ரமேஷ் பாலா ட்வீட்
சென்னை: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளதாக ஒரு பார்வை உள்ளதாக பிரபல சினிமா செய்தியாளர் ரமேஷ் பாலா தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட சினிமா செய்தியாளர் ரமேஷ் பாலா, " இங்கு 2 எதிர்மறை கருத்துக்கள் உள்ளன.

பார்வை 1: உத்தப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளார்கள்.
பார்வை 2: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் மடத்தின் மடாதிபதி. எனவே ஆன்மீக காரணங்களுக்காக ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்தார். உங்கள் பார்வை?"
இதேபோல் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற 'தலைவர்'. தமிழ் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சரை கைகளை கூப்பி வாழ்த்துகிறார். அதன் பின்னர் அவர் கால்களைத் தொட கீழே குணிவதை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் காணலாம்.
லக்னோவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சனிக்கிழமை சந்தித்தபோது பாதங்களைத் தொட்டார். உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சரிவு தேவையா ரஜினிகாந்த்? ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல.

யோகி ஆதித்யநாத்திற்கு வயது 51. ரஜினிகாந்துக்கு வயது 73. கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு, ரமேஷ் பாலா, பணஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் யூடியூப் சேனல்களே.. இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள்.
'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள். அதற்கு அவர்கள் எப்படி ஈயம் பூசுகிறார்கள் என்பதை உலகம் பார்க்கட்டும். எனது புகைப்படத்தை தம்ப்நெயிலாக வைத்து 'ப்ளூ சட்டையை கிழித்த' என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு வஞ்சத்தை தீர்த்தீர்களே? அதுதானா உங்கள் சேனல்களின் தரம்? நன்கு யோசியுங்கள்.
என்னை கரித்துக்கொட்டி, கெட்ட வார்த்தை பேசும் டம்மி பீஸ்களின் பேட்டிகளால்.. நான் 1% கூட அசரப்போவதில்லை. எல்லாமே வீணான முயற்சி. இதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் நோக்கமும் விருந்தினரின் மலிவான நோக்கங்களையும் பகிரங்கப்படுத்தப்படும். யார் சரியானவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். கொஞ்சமாவது முதிர்ச்சி உள்ள நெறியாளர்களை வேலைக்கு எடுங்கள். அவர்களும் ஹீரோக்களின் முரட்டு ஜால்ராக்களாக இருப்பது கண்ணியமான மீடியா தொழிலுக்கே பேரவமானம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications