சிஎம் சார் ஹெல்ப் மீ! முதல்வர் செல்லும் வழியில் நின்ற இளைஞர்.. காரை நிறுத்திய ஸ்டாலின் -நடந்தது என்ன
சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் இளைஞர் ஒருவர் பதாகையுடன் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இதையடுத்து காரை நிறுத்தி அந்த இளைஞரிடம் பேசினார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பல முறை சாலைகளில் பொது மக்களை சந்தித்து பேசி இருக்கிறார். பொதுவாக சைக்கிளிங் செல்லும் சமயங்களில் பொது மக்களிடம் அவர் இயல்பாக பேசுவது வழக்கம்.
இது போக பொது இடங்களில் அவ்வப்போது மக்களிடம் சென்று நேரடியாக பேசுவது வழக்கம். சில நாட்களுக்கு முன் பேருந்தில் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பேசினார்.

காரை நிறுத்தினார்
அதேபோல் மூதாட்டி ஒருவருக்காக சமீபத்தில் தனது கான்வாயை நிறுத்தி உதவி செய்தார். பல முறை முதல்வர் ஸ்டாலின் இப்படி சாலையில் தனது கான்வாய்க்காக காத்திருக்கும் நபர்களை சந்தித்து அவர்களிடம் மனுக்கள் வாங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் செல்லும் சமயங்களிலில் கூட பூங்காக்களில் மக்கள் சிலர் அவரை சந்தித்து மனுக்கள் அளித்து வருகிறார்கள்.

சிஎம் சார் ஹெல்ப் மீ
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகம் செல்லும் வழியில் டிடிகே சாலையில் இளைஞர் ஒருவர் அவரை சந்திக்க காத்திருந்தார். சிஎம் சார் ஹெல்ப் மீ என்ற வாசகம் அடங்கிய போர்டை கையில் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர் காத்துக்கொண்டு இருந்தார். அந்த வழியாக கான்வாயில் சென்ற முதல்வர் ஸ்டாலின் இதை பார்த்துவிட்டு உடனே காரை நிறுத்த சொன்னார். இதையடுத்து சில மீட்டர்கள் சென்ற கார் நிறுத்தப்பட்டது.

இளைஞர் கோரிக்கை
இதையடுத்து அந்த இளைஞரை உடனே வரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைத்தார். அங்கு வந்த இளைஞர், தான் ஆந்திராவை சேர்ந்த மாணவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தனக்கு மருத்துவம் படிக்க விருப்பம் என்றும், நீட் தேர்வால் முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி. அதற்கு எதிராக மசோதா கொண்டு வந்ததற்கு நன்றி.

என்ன சொன்னார்?
நீங்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறீர்கள்.. இந்தியா முழுவதும் நீட் தேர்வு விலக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் அமைதியாக கேட்டார். அதன்பின் கண்டிப்பாக உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். நீட் தேர்வில் விலக்கு பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்று முதல்வர் ஸ்டாலின் அந்த இளைஞரிடம் உறுதி அளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications