எடப்பாடியாரை மலைத்து பார்த்த ஓபிஎஸ்.. "யாருன்னு பாருங்க".. அந்த டப்பா எடுப்பா".. பெருமையில் போடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடியில் பிரச்சாரம் செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.. இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஓபிஎஸ் வீட்டிலேயே நடந்துள்ளது.

Recommended Video

    நானும் உனக்கு அம்மா தான் தம்பி… ஈபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய ஓபிஎஸ் அம்மா!

    தேர்தல் நெருங்கி வருகிறது.. தமிழக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுகிறார்.. வழக்கம்போலவே, ஓபிஎஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களம் காண்கிறார்..

    தேனி

    தேனி

    இதனிடையே கருத்து கணிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், திமுகவுக்கு தேனி மாவட்டத்தில் பலம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம், போடி தொகுதியை ஓபிஎஸ் அபாரமாக கைப்பற்றுவார் என்ற கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. எனினும், ஓபிஎஸ்-ஸின் குடும்பமே தொகுதிக்குள் சுழன்று சுழன்று வாக்கு கேட்டு வருகிறது.

     அண்ணன் ஓபிஎஸ்

    அண்ணன் ஓபிஎஸ்

    இந்நிலையில், போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அப்போது, "அண்ணன் ஓபிஎஸ்.., அண்ணன் ஓபிஎஸ்.." என்று பிரச்சாரத்தின் பல இடங்களில் பூரித்து சொன்னார் முதல்வர்.. ஓபிஎஸ் தொகுதிக்குள் செய்த பல திட்டங்கள், அறிவிப்புகள், நன்மைகளை லிஸ்ட் போட்டு சொன்னார்.. எடப்பாடியார் இப்படி சொல்ல சொல்ல, ஓபிஎஸ் அப்படியே மலைத்து போய் முதல்வரை பார்த்தார். பிரச்சாரம் முடிந்ததும், தன் வீட்டுக்கு முதல்வரை அழைத்து சென்றுள்ளார் ஓபிஎஸ்.

    வரவேற்பு

    வரவேற்பு

    துணை முதல்வரின் மொத்த குடும்பமும் முதல்வரை இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றுள்ளது.. அப்போது, முதல்வரை சந்திக்க தன் அம்மாவிடம் அழைத்து சென்றுள்ளார் ஓபிஎஸ்.. "யாரு வந்திருக்காருன்னு பாரும்மா.. முதல்வர் அண்ணன் வந்திருக்காரு" என்று சொல்லவும், எடப்பாடியார், ஓபிஎஸ் அம்மாவின்அருகில் சென்று, அவரது கையையும் இறுக பற்றி கொண்டார்.

     விபூதி டப்பா

    விபூதி டப்பா

    அப்போது உணர்ச்சிப்பெருக்கில், வாழ்த்தியவர், "அந்த டப்பா எடுப்பா" என்று சொல்லியிருக்கிறார். பிறகு விபூதி டப்பா அம்மாவிடம் தரப்பட்டுள்ளது.. அதில் இருந்து விபூதி எடுத்து, முதல்வரின் நெற்றியிலும், துணை முதல்வரின் நெற்றியிலும் பூசி ஆசீர்வதித்துள்ளார்... உடனே எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.. அவரது கண்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்த அனைவரின் கண்களும் அப்போது கலங்கி விட்டன...

    அருமை

    அருமை

    கடந்த ஓரிரு வருடங்களாகவே, இரட்டை தலைமை, முதல்வர் வேட்பாளர் விவகாரம், உட்கட்சி பூசல், தனிஆளுமை, சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு, என்ற பூசல் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த இந்த சம்பவமானது, மொத்த இடைவெளியையும் தகர்த்துவிட்டது..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+