"அடுத்து நாமதான்".. நம்ம எடப்பாடியாரா இது.. தேடி வரும் "கஷாயம்".. வெளியான புது பின்னணி.. !
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன
சென்னை: முன்னாடி மாதிரி எல்லாம் இல்லை.. இப்போது எடப்பாடியாரின் நடவடிக்கைகளே வேற லெவலில் மாறிவிட்டதை பார்த்து மற்ற கட்சிகளே மூக்கின் மீது விரலை வைத்து கொண்டிருக்கிறது.
வேட்பாளர்கள், கூட்டணி முடிவுகள், தொகுதி உடன்பாடுகள் இப்படி எதுவுமே முடிவாகும் முன்பே பிரச்சாரத்திற்கு கிளம்பியவர் எடப்பாடி பழனிசாமி.
பல கட்ட பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.. பிரச்சார பேச்சும் வியப்பை தந்து வருகிறது.. எந்தவித தயக்கமும் இல்லாமல் பேசி வருகிறார்.. ஆரம்பத்தில் மேடை பேச்சு என்றால் ஒரு சிறு தயக்கம் தென்பட்டது.. இப்போது அதெல்லாம் போயே போச்சு. அதிலும் கொஞ்சம் கூட டயர்ட் ஆகாமல், எதிர்க்கட்சிகளை இவர் விமர்சனம் செய்வதை பார்த்து மிரண்டு பார்க்கின்றனர் தொண்டர்கள்..

காலர் மைக்
கடந்த எம்பி தேர்தலின்போதே, இவரது பேச்சின் பாணி மாற ஆரம்பித்தது.. காலர் மைக்கில் ஓபன் வேனில் நின்று கொண்டு பேசும் முதல் முதல்வர் அநேகமாக இவராகத்தான் இதுக்கும்.. அதுவும் உச்சிவெயிலில் குடை கூட இல்லாமல் பிரச்சாரம் செய்தார்.. இது வேறு வகையான ஹைடெக் பானி பிரச்சாரமாக இருந்தது.. இப்போது இதே காலர் மைக்கில் சரளமாக விளாசி தள்ளுகிறார்.

விமர்சனம்
அப்படி பேசும்போது, 4 ஆண்டு கால சாதனைகளையும், + திமுக தலைவரின் மீதான விமர்சனத்தையும் மறக்காமல் பதிவு செய்கிறார்.. காலையில் ஆரம்பித்தால் சாயங்காலம் வரை பிரச்சாரம் நடக்கிறது.. இந்த பிரச்சாரங்களுக்கு நடுவில் முதல்வரை தேடி ஒரு கஷாயம் வருகிறதாம்.. அந்த கஷாயத்தை முதல்வரின் மனைவி ரெடி பண்ணி அனுப்புகிறார்.. சேலம் மட்டும் என்றில்லை, முதல்வர் எந்த மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தாலும் இந்த கஷாயம் வந்து சேர்ந்துவிடுகிறது.

கவனம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், தினமும் ஏராளமான மக்களை நேரடியாக சந்திக்கும் சூழல், வருவதால் முதல்வர் இந்த கஷாய விஷயத்தில் கவனமாகவே இருக்கிறார் என்கிறார்கள். நாள் முழுக்க பேசி வருவதால், இந்த கஷாயம் அவருக்கு மிகவும் தெம்பை தருவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பேசிப்பேசி குரல் கம்மிவிட்டதால் சில மூலிகை பானங்களையும் குடிக்கிறாராம்.

ஜெயிப்போம்
பிரச்சாரம் முடிந்தாலும், அந்தந்த பகுதி நிர்வாகிகளை தனியாக சந்தித்து பேசுகிறாராம்.. அதிலும் சீட் கிடைக்காமல் ஏமாற்றத்திற்குள்ளான அதிருப்தியாளர்களை அழைத்து சகஜமாக பேசுகிறாராம்.. "தைரியமா வேலை பாருங்க. நாமதான் ஜெயிப்போம்" என்று தெம்பாக சொல்கிறார். இதையெல்லாம்தான் அந்தந்த தொகுதி மக்கள் கவனித்து வருகிறார்கள.. இறுதியில் மறுநாள் பிரச்சாரத்தில் என்ன பேசலாம் என்ற குறிப்புகள் மற்றும் ஆலோசனை நடத்துகிறாராம். மேலும் தன்னை பற்றிய எந்த விமர்சனம் வந்தாலும் அதை விவாதிக்கிறாராம்.












Click it and Unblock the Notifications