"ஐயாவுக்கு ஷுகர் போட்டு".. சூடான பிரச்சாரத்துக்கு மத்தியில்.. ஆவி பறக்க டீ சாப்பிட்ட எடப்பாடியார்!
சாலையோர கடையில் முதல்வர் டீ குடித்துவிட்டு சென்றார்
சென்னை: திடீரென்று டீக்கடைக்குள் முதல்வர் நுழைந்துவிட்டார்.. அவரை பார்த்ததும் அப்படியே பதைபதைத்து போய் நின்றனர் அந்த டீக்கடை ஊழியர்கள்..!
Recommended Video
தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்... போகிற இடங்களில் எல்லாம் டிடிவி தினகரனை விமர்சித்து விடுகிறார்.. அப்படியே மறக்காமல் திமுக தலைவரையும் லிஸ்ட் போட்டு கேள்விகள் கேட்டு வருகிறார்.

அந்த வகையில் திருப்பூரில் உள்ள தாராபுரம் பகுதியிலும் மக்களிடம் நேரடியாக பேசி பிரச்சாரம் மேற்கொண்டார் முதல்வர்.. பிறகு இறுதியில் அங்குள்ள ஒரு டீ கடைக்குள் திடீரென்று நுழைந்தார்.. முதல்வர் உள்ளே வந்ததும் கடைக்காரர்களுக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை..
அவருடன் பல நிர்வாகிகளும் உடன் சென்றனர்.. போடப்பட்டிருந்த சேரில் முதல்வர் உட்கார்ந்து கொண்டார்.. அவருடன் 3 பேர் சேரில் உட்கார்ந்து கொள்ள, மற்றவர்கள் நின்று கொண்டிருந்தனர்.. அப்போது பக்கத்தில் இருந்தவர் முதல்வரிடம், "டீ சொல்லட்டுமா" என்று கேட்க, முதல்வரும் சரி என்கிறார்...
பிறகு "சுகர் போட்டு 2 டீ" என்கிறார்.. பிறகு "4 டீ" என்று சொல்லவும், கப்-டம்பளர்களில் டீ வருகிறது.. எடப்பாடியாருக்கும் ஒரு டம்பளரில் டீ தரப்பட்டது.. அதை எடுத்து கப்பில் ஊற்றி, ஆற்றி ஆற்றி முதல்வர் குடிக்கிறார். அந்த கடைக்குள் நிறைய பிஸ்கட்டுகள், கேக்குகள் இருந்தன.. ஆனால், எதையுமே சாப்பிடவில்லை.
உடனிருந்த அதிமுக நிர்வாகிகளுடன் கட்சி விஷயத்தை பேசி கொண்டே, படுகேஷூவலாக உட்கார்ந்து டீ குடித்து முடித்தார் எடப்பாடியார்.. ஏற்கனவே "எளிமையான முதல்வர்" என்று பெயர் பெற்றவர் எடப்பாடியார்.. அதை இப்படி நேரில் வந்து உட்கார்ந்து கண் முன்னாடியே நிரூபித்து கொண்டிருப்பதை, அந்த கடைக்காரர்கள் அப்படியே வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தனர்.


Click it and Unblock the Notifications
