Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த சூப்பர் வசதி.. பத்திரம், பட்டா வாங்குறவங்களுக்கு வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி நில உரிமையாளர்கள் நிலங்களை அளவீடு செய்ய தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் செல்ல தேவையில்லை.. பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆங்கிலேயர்கள் அந்த காலத்தில் நிலங்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நில அளவை பிரிவினை உருவாக்கினார்கள். அவர்கள் தீர்வை விதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்படாத தரிசு,வனம்,மற்றும் புறம்போக்கு(பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது) என ஒவ்வொரு வகையாக நிலங்களை பிரித்தார்கள். இதேபோல் ஒருபோகம் அல்லது இருபோகம் என நஞ்சை நிலங்களும்,புஞ்சை அல்லது மானாவாரி என நிலங்களை பிரித்தார்கள்.

CM MK Stalin launched online facility for land measurement in tamilnadu

அதன்படி தான் ஆங்கிலேயர்கள், தமிழகத்தில் நிலங்களுக்கு ஏற்றவாறு புலங்கள்,(SURVEY FIELD) உட்பிரிவுகள் (SUB-DIVISION) என அமைத்து, அளவைப்பணி (MEASUREMENTS WORK) முடித்து நிலப்படங்கள் (FIELD MEASUREMENT BOOK) உருவாக்கினார்கள். மேலும் வவட்ட வரைபடம்(TALUK MAP) , மாவட்ட வரைபடம்(DISTRICT MAP) தயாரித்தார்கள். அதேநேரம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடனே மாற்றி வரைப்படமும் தயாரித்தார்கள்.

அதன்படியே இன்றைய நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் வரைபடங்களில் மாற்றம் செய்கிறது தமிழ்நாடு நில அளவைத்துறை. இந்த நில அளவை துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் நேரில் வந்து நிலத்தை, இடத்தை, மனையை அல்லது அடுக்குமாடியை அளந்து, சரியாள அளவினை வாங்கியவரின் பெயரில் மாற்றுவார்கள். அப்படி மாற்றினால் மட்டுமே பட்டா கிடைக்கும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நில உரிமையாளர்கள் நிலத்தை விற்பனை செய்ய, நிலத்தை மனைகளாக பிரித்து விற்க அல்லது வீட்டு மனைகளை விற்க, கண்டிப்பாகநிலத்தை அளக்க வேண்டும். இதேபோல் பொதுமக்கள் வீடு வாங்கும் போது அல்லது நிலம், அல்லது வீட்டு மனை வாங்கு போது கண்டிப்பாக நிலத்தை நில அளவையரை வைத்து அளக்க வேண்டும்.

அதற்கு தற்போதைய நிலையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியதிருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் ஸ்டாலின் திங்கள் அன்று தொடங்கி வைத்தார்.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை அல்லது வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நிலஅளவைக்கு ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின், நேற்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட 3,500 பேருக்கு 60 ஆண்டு கழித்து மாற்று இடத்திற்கான பட்டாக்களையும் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+