"ஹலோ மேரி..ங்களா.. ஸ்டாலின் பேசறேன்.. என்னாச்சும்மா?".. திடீரென போனை போட்டு.. வைரலாகும் வீடியோ
ஸ்டாலின் ஒரு மூதாட்டியிடம் போனில் பேசி கோரிக்கையை பற்றி விசாரித்தார்
சென்னை: "ஹலோ மேரிங்களா.. நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. கோரிக்கை என்ன ஆச்சும்மா, சந்தோஷம்தானே?" என்று புகார் மனு அளித்த ஒரு பெண்ணிடம் போன் போட்டு முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
Recommended Video
இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே ஸ்டாலின் வித்தியாசமான முறையில் ஆட்சி செலுத்தி வருகிறார்.. எதிர்க்கட்சிகளும் வியக்கும் அளவுக்கு, விமர்சனங்கள் பெரிதாக இல்லாமல் திறன்பட ஒவ்வொரு விஷயத்தையும் கையாண்டு வருகிறார்.
புதிதாக அறிவிக்கப்படும் திட்டம் என்றில்லாமல், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரச்சாரத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளின்படியும் ஒவ்வொரு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. இதையடுத்து, அவர் மக்களின் குறைகளை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது.

மனுக்கள்
அதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமும் ஒன்றாகும்.. முதல்வர் முக ஸ்டாலின் முதல்நாள் கையெழுத்திட்ட 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் மூலம் ஆயிரக்கணக்கில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன... எனினும், அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து திடீரென ஆய்வு செய்தார்.

ஸ்டாலின்
அதற்காக திடீரென அந்த துறையின் அலுவலக கதவுகளை திறந்து உள்ளே சென்ற முதல்வர், மேரி என்ற பயனாளி ஒருவருக்கு போன் செய்கிறார்... "ஹலோ மேரிங்களா.. நான் முக ஸ்டாலின் பேசுகிறேன்" என்கிறார். அந்த அந்த பெண்.. ஆமாங்ய்யா ஆமாய்யா, நான் மேரிதான் பேசுகிறேன் என்று பதிலளிக்கிறார்.

வீடியோ
உடனே முதல்வர், "உங்க கோரிக்கை என்ன ஆச்சும்மா" என்று கேட்க, "ஐயா, ஆர்டர் காப்பி வந்து கையிலேயே கொடுத்துட்டாங்க" என்கிறார்.. உடனே முதல்வர், "அப்படியா இப்போ சந்தோஷமா?" என்று கேட்க, "ரொம்ப சந்தோஷம் ஐயா, ரொம்ப சந்தோஷம்" என்று மேரி பதிலளிக்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.

வைரல்
சாதாரணமாக அறிவிப்பு என்று மட்டும் உத்தரவிடாமல், அந்த திட்டம் எப்படி நடக்கிறது என்று நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்யும் முதல்வரின் செயல்பாடு அனைவருக்கும் வியப்பை தந்து வருகிறது... கொரோனா ஒரு பக்கம் ஆளும் தரப்புக்கு சவாலாக உள்ள நிலையில், சாமானியர்களின் பிரச்சனைகளையும் முதல்வர் காது கொடுத்து கேட்டு வருவது மேலும் ஆச்சரியத்தை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications