Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல நாள் கனவு.. நாளையோடு சென்னை ஐடி காரிடார் ஓஎம்ஆர் சாலையே மாறப்போகுது.. அடடா! என்னன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐடி காரிடார் ஓஎம்ஆர் சாலையில் நாளை முக்கியமான திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஓஎம்ஆர் சாலையில் செல்லும் மக்களின் வசதிக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.

CM MK Stalin to throw open one of the two U shaped Flyover on the IT Corridor of OMR tomorrow

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.

ஓஎம்ஆர் சாலை திட்டங்கள்: இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.

இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ன்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

முக்கியமான திட்டம்: அந்த வகையில் சென்னை ஐடி காரிடார் ஓஎம்ஆர் சாலையில் நாளை முக்கியமான திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலைகளில் சில இடங்களில் யூ டர்ன் அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே யூ டர்ன் அமைக்கப்பட்டு உள்ளது.

பாலம் போல யூ டர்ன் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் எளிதாக இதில் பயணம் செய்ய முடியும். சாலைகளில் சிக்கனலில் நிற்காமல் எளிதாக வாகனங்களை திருப்பி செல்ல முடியும். நாளை முதல்வர் ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே இரண்டு பாலங்கள் உள்ள நிலையில் நாளை ஒரு பாலம் திறக்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்: சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, 'ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னை முழுக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-டர்ன் அதிகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது

இந்த திட்டத்தின் கீழ் பல சிக்னல்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூட சென்னை போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நகரம் முழுவதும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் 65 சிக்னல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திட்டம் தற்போது ஸ்பென்சர், தேனாம்பேட்டை மற்றும் தி நகர் சிக்னல்களில் சோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஓஎம்ஆர், ஈவிஆர் சாலை மற்றும் 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பென்சர், நந்தனம் ஆகிய இடங்களில் சிக்னல்கள் மூடப்பட்டு, ஒருபுறம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வலப்புறம் திரும்பவோ அல்லது U-டர்ன் எடுக்கவோ மீடியன் U-டர்ன் சந்திப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் சிக்னல் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் சாலை மற்றும் தி.நகரில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலைக்கு சென்று, தேனாம்பேட்டை மெட்ரோ மற்றும் அண்ணா அறிவாலயம் சந்திப்புகளில் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+