மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு அடித்த ஜாக்பாட்! ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது.
ஒவ்வொருவரும் சொந்தமாக கான்கிரீட் வீடுகள் கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு இந்த கனவை நிறைவேற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். இந்த குறையை போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் உள்ளன.

அதன்படி தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றவும், வீடு இல்லாத மக்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கவும் தமிழக அரசு சார்பில் திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்பது கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2030ம் ஆண்டுக்குள் 'குடிசை இல்லாத தமிழகத்தை' உருவாக்க ‛கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 6 ஆண்டுகளில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மேலும் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்படி அரசு சார்பில் ஒருவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் வழியாக ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்படும். அதன்படி கூடுதலாக 1 லட்சம் பேருக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 360 சதுரஅடியில் வீடு கட்டி கொடுக்கப்படும்.
இந்த வீட்டில் அடுக்கு பகுதி சமையலறை இருக்கும். 300 சதுர அடி RCC கூரை அமைக்கப்பட்டு இருக்கும். மீதமுள்ள 60 சதுர அடி RCC அல்லது வேறு எந்த வகை மேற்கூரையாக வேண்டுமானாலும் இருக்கும். இதில் மலைப்பாங்கான பகுதிகளில், பயனாளியின் விருப்பப்படி கூரை அமைக்கலாம். இந்த வீடு கட்டும் திட்டத்தில் செலவு குறைந்த மற்றும் விரைவான கட்டுமான தொழில்நுட்பங்கள் அனுமதிக்கப்படும். பயனாளிகளுக்கு DBT மாதிரி மூலம் பணம் செலுத்தப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications