ஆட்டம் காட்டும் அக்டோபர், டிசம்பர்! பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை!
சென்னை: அக்டோபர் தொடங்கிவிட்டாலே, சென்னை மக்களுக்கு பீதி தொடங்கிவிடும், காரணம் பருவமழைதான். இந்நிலையில் பருவமழை பாதிப்பை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மூன்று மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்பாராத வெள்ளம் உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

அப்போது முதல் இப்போதுவரை இந்த பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அரசு இந்த வெள்ள பாதிப்பை தடுக்க தீவிரமான முயற்சிகளை எடுக்கிறது. ஆனால் எதுவும் பெரிய அளவுக்கு கைகொடுப்பதில்லை. கடந்த ஆண்டு சென்னைக்கு பதில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பருவமழை குறி வைத்தது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தால் மேற்குறிப்பிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தூத்துக்குடியும், திருநெல்வேலியும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனவே இந்த ஆண்டும் இதுபோன்று எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முதலமைச்சர் இன்று அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர், "முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களில் மொத்தமாக பெய்துவிடுகிறது. கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது" என்று கூறினார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications