திமுகவின் ஹாட் டாபிக் இதுதான்.. சேகர் பாபுவை கடிந்து கொண்ட ஸ்டாலின், உதயநிதி.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்துக்கும் மிக நெருக்கமானவர் என வர்ணிக்கப்படுபவர் அமைச்சர் சேகர்பாபு. அவரை ஸ்டாலினும், உதயநிதியும் கடிந்துகொண்ட சம்பவம்தான் திமுகவின் ஹாட் டாபிக்.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசினார். ஒரு கட்டத்தில் வெளிநடப்பு செய்தது அதிமுக. அன்றைக்கு எடப்பாடி கலந்துகொள்ளாததால் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வெளி நடப்பு செய்தனர்.

வெளியே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த உதயகுமார், அமைச்சர் சேகர்பாபுவை பொறுக்கி, கேடி, அமைச்சர் பதவிக்கே தகுதியில்லாதவர் என்றெல்லாம் மிக கடுமையாக விமர்சித்தார். ஒரு அமைச்சரை இந்த அளவுக்கு ஒருமையில் இதுவரை அதிமுகவினர் விமர்சித்தது இல்லை. உதயகுமாரின் அந்த கோபம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. ஏன், இந்த அளவுக்கு அவர் கடுமைகாட்ட வேண்டும்? என்று விவாதித்துக்கொண்டனர்.
அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள்
அவரது கோபத்துக்கு என்ன காரணம் ? என்று விசாரித்தபோது, ''துறையின் சார்பில் கடந்த 4 வருடங்களில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் சேகர்பாபு பேசிக் கொண்டிருந்த போது அதிமுக ஆட்சியை குற்றம்சாட்டும்வகையில் அவர் குறிப்பிட, அதனை மறுத்து உதயகுமார் பதிலளித்தபோது, சட்டென்று உணர்ச்சி வயப்பட்ட சேகர்பாபு, அச்சில் ஏற்றமுடியாத ஒரு வார்த்தையைச் சொல்லி ஒருமையில் உதயகுமாரை அட்டாக் செய்தார்.
இதனை பொறுக்க முடியாத உதயகுமாரும், அதிமுகவினரும் அமளியில் ஈடுபட்டனர். பிறகு வெளி நடப்பு செய்தனர். சேகர்பாபுவின் முறையற்ற பேச்சுதான் உதய குமாரை கொந்தளிக்க வைத்தது. சேகர்பாபுவுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினார்'' என்று விவரிக்கின்றனர். அன்றைய தினம் சபை முடிந்ததும், சேகர்பாபுவுக்கு நாவடக்கம் தேவை ; சபையின் மாண்புகளைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் கோபம்
இதனையடுத்து, சேகர்பாபுவை ஃபோனில் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரிடம் டோஸ் வாங்கிய சேகர்பாபு, அதற்கு முன்னதாக அதாவது 2 வாரங்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியிடமிருந்தும் அவருக்கு டோஸ் விழுந்துள்ளது. இது பற்றி விசாரித்தபோது, ''வருகிற சட்டமன்ற தேர்தலில் மேயர் பதவியை துறந்துவிட்டு எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட மேயர் ப்ரியா விரும்புவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். சமீபத்தில் உதயநிதியை அவர் சந்தித்தபோது, எம்.எல்.ஏ. சீட்டை ப்ரியாவுக்கு உறுதி படுத்தியிருக்கிறார்.
கடுமையாக பேசிய சேகர் பாபு
குறிப்பாக, சேகர்பாபுவின் ஆதரவாளரான தாயகம் கவி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் திரு.வி.க தொகுதிதான் ப்ரியாவுக்காக ஒதுக்கப்படவிருக்கிறது. இதற்காக, ப்ரியாவுக்காக பெரிய லாபி ஒன்று வேலை செய்து வருகிறது. சேகர்பாபுவின் சிஷ்யையான ப்ரியா, கடந்த 1 வருடங்களாக அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நிலையில் தனது ஆதரவாளரின் தொகுதியையே ப்ரியா குறிவைப்பதும், உதயநிதியை சந்தித்ததும் அறிந்த சேகர்பாபு கோபமடைந்து, ப்ரியாவை தொடர்பு கொண்டு, எனக்குத் தெரியாமல் உதயாவை நீ சந்திப்பாயா? யார் உனக்கு பெர்மிசன் கொடுத்தது ? என்கிட்டே பெர்மிசன் வாங்கினியா? என்றெல்லாம் கடுமையாக பேசியிருக்கிறார் சேகர்பாபு.
சிட்டி மேயர்
இந்த விசயம், உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சேகர்பாபுவை வரவழைத்த உதயநிதி, பெண்களிடம் எப்படி பேசனும்ங்கிற நாகரீகம் உனக்குத் தெரியாதா? சென்னையிலுள்ள கட்சிக்காரங்க என்னை சந்திக்கனும்னா உங்க கிட்டே பெர்மிசன் வாங்கனுமா? அதுவும் அவங்க இந்த சிட்டியின் மேயர். அவர், என்னை சந்திக்க வருவதற்கு உங்களிடம் அனுமதி வாங்கனுமா? யார் போட்ட ரூல்ஸ் இது? இப்படித்தான் கட்சிக்காரர்களை மிரட்டி அடக்கி வெச்சிருக்கீங்களா? இதுதான் லாஸ்ட் வார்னிங் ''என்று செமயாக திட்டித்தீர்த்து அனுப்பி வைத்துள்ளார்












Click it and Unblock the Notifications