சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படி சாத்தியமானது.. அதிகாரிகளிடம் "விசாரித்த" முதல்வர் ஸ்டாலின்.. களமிறக்கப்படும் புது மாடல்.. செம

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முக்கியமான சில முடிவுகளை, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க உள்ளது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் பல திட்டங்களை, அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நடைமுறைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் வாங்குவது தொடங்கி கூடுதலாக ரெமிடிஸ்வர் மருந்துகளை வாங்குவது வரை பலர் அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதோடு வெளிநாடுகளில் இருந்து வேக்சின் இறக்குமதி செய்யவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாடலை கையில் எடுக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்தியாவில் இரண்டாம் அலை தொடங்கிய நகரங்களில் மும்பை முக்கியமானது. மும்பையில்தான் மார்ச், ஏப்ரலில் மிக அதிகமாக கேஸ்கள் பரவி வந்தது. இரண்டாம் அலையில் எபிசென்டர்களில் ஒன்றாக மும்பைதான் இருந்தது.

மும்பை

மும்பை

இப்படிபட்ட மும்பைதான் ஏப்ரல் மாத இறுதியிலேயே கொரோனாவை கட்டுப்படுத்த தொடங்கியது. மும்பையில் திண்சரிற் கேஸ்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில் தற்போது இது 2000 வரை குறைந்துள்ளது. பெரிய அளவில் மும்பை கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. டெல்லி ஹைகோர்ட், சுப்ரீட் கோர்ட் என்று பல நீதிமன்றங்கள் மும்பையின் இந்த செயல்திட்டத்தை பாராட்டியது.

 மற்ற நகரங்கள்

மற்ற நகரங்கள்

மும்பையின் மாடலை மற்ற நகரங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இந்த நிலையில், தற்போது மும்பையில் கொரோனா பரவல் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும், வல்லுனர்களிடமும் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார். மும்பை வல்லுநர்கள் சிலரிமுடம் இவர் பேசி உள்ளார்.

வேகம்

வேகம்

எப்படி இவ்வளவு வேகமாக கேஸ்களை கட்டுப்படுத்துவது சாத்தியமானது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார். மும்பையில் அதிகார பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கூட்டப்பட்டது. மாநகராட்சி மேயர் மட்டும் உத்தரவு போடாமல், பல அதிகாரிகளும் முக்கிய முடிவுகளை எடுத்தனர். மேலிடத்தில் இருந்து ஆர்டர் வர வேண்டும் என்று யாருமே காத்திருக்கவில்லை.

ஆர்டர்

ஆர்டர்

பல்வேறு அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, அதிகாரம் பரவாலாக்கப்பட்டு, முடிவுகள் துரிதமாக எடுக்கப்பட்டது. மும்பை மாடல் வெற்றிபெற காரணமே இந்த அதிகார பரவல்தான். பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிங்களுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இந்த செயல்திட்டதான் வெற்றிபெற்றது. இதைதான் முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும் கொண்டு வர போவதாக தகவல்கள் வருகின்றன.

அதிகார பரவல்

அதிகார பரவல்

கீழே வேலை செய்யும் உயர் அதிகாரிகளை முக்கிய முடிவு எடுக்க ஸ்டாலின் அனுமதி வழங்குவார். சென்னையில் அதிகாரத்தை பரவலாக்குவார் என்று கூறுகிறார்கள் . அனைத்திற்கும் முதல்வர் அல்லது சுகாதாரத்துறை அமைச்சர்தான் வர வேண்டும் என்று இல்லாமல், செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் சமயோஜிதமாக செயல்பட்டு இனி முடிவுகள் எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

English summary
Tamilnadu CM M K Stalin asks about Mumbai Model: It may be implemented in Chennai soon to tackle Covid 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X