தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழகத்தில் பருத்தி , நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் விசைத்தறி, கைத்தறி மற்றும் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 25 முதல் 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திருப்பூரில் உள்ள நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ஸ்டிச்சிங் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பருத்தி, நூல் விலையேற்றமும் அவர்களை தொழில் செய்ய முடியாமல் பரிதவிக்க வைக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை நீக்க நடவடிக்கை தேவை. இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கழிவு பருத்தியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். நூற்பாலை சங்கம் உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு நூல்களின் விலை உயர்வு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.
அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தில் நூற்பாலைகளுக்கு நிதியுதவியை வழங்க வேண்டும். நூற்பாலை நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டு நீடிக்க வேண்டும். பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும் என அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications