Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

73வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. “சூழ்ச்சிகளை முறியடிப்போம்” என சபதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.

CM Stalin Celebrates 73rd Birthday

காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்கிறார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து அவர், காலை 9 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். அண்ணா அறிவாலயம் வரும் அவருக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, கலைஞர் அரங்கில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை! உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.

தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!

தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது! நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!

சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+