நன்றி முதல்வரே.. கரும்பும் கையுமாக வந்த விவசாயிகள்.. ஸ்டாலின் முன்பு மாஸ் காட்டிய பொன்முடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்வரை வரவேற்க அமைச்சர் பொன்முடி சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

Recommended Video

    நன்றி முதல்வரே.. கரும்பும் கையுமாக வந்த விவசாயிகள்.. ஸ்டாலின் முன்பு மாஸ் காட்டிய பொன்முடி!

    பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தவும் முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று சென்று இருந்தார். அதேபோல் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசாருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இங்கு கூட்டங்களை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் வழியாக சென்னை திரும்பினார். விழுப்புரம் வழியாக சென்னை சென்ற தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    வரவேற்பு

    வரவேற்பு

    உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தலைமையில் , மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.இரா.இலட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் பிடாகம் மேம்பாலம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கரும்பு

    கரும்பு

    அப்பொழுது கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கையில் கரும்புகள் வைத்து வரவேற்றனர். முதல்வரை வரவேற்க அமைச்சர் பொன்முடி சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதற்காக விவசாயிகள் பலர் நேற்று சாலை ஓரம் முதல்வரின் வருகைக்காக தயாராகி இருந்தனர்.

    விவசாய போராட்டம்

    விவசாய போராட்டம்

    பெண்கள் அதிக அளவில் வரிசையில் நின்று முதல்வரை வரவேற்றனர்.விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக முதல்வருக்கு அங்கு இருந்த கரும்பு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கையில் கரும்பு, அதன் மீது முதல்வர் ஸ்டாலின் படம் என்று அலங்காரம் செய்து முதல்வருக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    விழுப்புரம்

    விழுப்புரம்

    இதேபோல் விழுப்புரம் எல்லை புறவழிச்சாலையில் சேலம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னைக்கு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு வரவேற்பு அளித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் வரவேற்று வாழ்த்து பெற்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+