Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செக் வைத்த அமலாக்கத்துறை.. விசாரிக்காத ஸ்டாலின்.. அப்செட்டான ஜெகத்ரட்சகன்.. திமுக அஸ்திவாரத்தில் கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள விவகாரத்தில் திமுக எம்.பி.யும் கல்வியாளருமான ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.

ஜெகத்ரட்சகனை மட்டுமல்ல; திமுகவின் முக்கிய இலாகாக்களை வைத்திருக்கும் அமைச்சர்களையும் அதிரவைத்திருக்கிறது. திமுகவின் கஜானா என வர்ணிக்கப்படும் திமுக அமைச்சர்களை பொருளாதார ரீதியாக முடக்குவதுதான் இதன் பின்னணி. அதாவது தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு இவர் அதிக அளவில் பணம் கொடுப்பார். அதை முடக்க இந்த திட்டம் என்கிறார்கள். திமுகவிற்கு பணம் கிடைக்க கூடாது.. நிதி உதவி கிடைக்க கூடாது என்று இப்படி எல்லாம் காய் நகர்த்துகிறார். திமுகவின் தேர்தல் பலத்தை முடக்க முடிந்த அளவு பணிகளை இவர்கள் செய்கிறார்கள்.. என்று கூறப்படுகிறது.

jagathrakshakan enforcement department

முதல்கட்டமாக ஜெகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது அமலாக்கத்துறை என்கிறார்கள் திமுக மூத்த வழக்கறிஞர்கள். அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை ஜெகத்தை அப்-செட்டாக்கியது ஒருபுறம் எனில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையை அறிந்திருந்தும் அது குறித்து முதல்வர் ஸ்டாலின் தம்மிடம் விசாரிக்கவில்லையே என்கிற ஆதங்கம் தான் ஜெகத்தை வாட்டி எடுக்கிறதாம். ஸ்டாலின் நேரடியாக தன்னிடம் எதுவும் பேசவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் அவர்.

இப்படிப்பட்ட சூழலில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணைப் பெற முடியுமா? (ஸ்டே) என்று வழகறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

ஸ்டாலின் பயணத்திற்கு இடையே: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ.908 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பான தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில்.. இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ.908 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பான தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக MP ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை கணக்கில் வைத்தே ₹89.18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன மற்றும் ₹908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியது தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் வெளிநாடு: முன்னதாக ஸ்டாலின் வெளிநாடு சென்ற போதே அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போதுதான் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் வெளிநாட்டில் உள்ள நிலையில் திமுக எம்பி மீது ஆக்சன் எடுக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+