மொத்த திருச்சிக்கும் திருப்பம்... அட்ரா சக்க.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் 17.60 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு ஏக்கரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருச்சிராப்பளளி மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும், ஏற்கெனவே அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தற்போது பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசுப் பேருந்து நிலையம் நான்கு ஏக்கரில் அமைய உள்ளது.

இப்பேருந்து நிலையம் சுமார் 30,849 சதுரடி பரப்பிலான இரண்டு பேருந்து நடைமேடைகளுடன், 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன், 37 இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்கள், 45 காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் 1,42,945 சதுரடியில் அமைக்கப்படவுள்ளது. மேலும், இப்பேருந்து நிலையம், மழைநீர் வடிகால், சுகாதாரமான குடிநீர், 2 கழிப்பறை வளாகம், 17 இருக்கை கழிவறைகள், 31 சிறுநீர் கழிவறைகள், கண்காணிப்பு கேமரா, பொதுமக்கள் சேவை மையம் மற்றும் இதர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின்கீழ் ரூ.17.60 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தனியார் சொகுசு பேருந்து நிலையம், தென் மாவட்டங்களில் இருந்தும், திருச்சிராப்பள்ளி மாநகரில் இருந்தும், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் சொகுசு பேருந்துகளின் எளிதான போக்குவரத்துக்கும் அவற்றின் ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பெரும் பயனளிக்கும்.
அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் மாநகராட்சி சார்பில் மொரணப்பள்ளி கிராமத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், தரைத்தளம் வரையிலான கட்டுமானத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் மூலமாக அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் போக்குவரத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால், தண்ணீர் தொட்டி, குடிநீர், கழிவுநீர் செல்லும் வசதிகள் மேற்கொள்ள ரூ. 10 கோடிக்கு நி்ர்வாக அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications